நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அதுவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் ஹீரோயின் ஆக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் இருப்பதே பெரிய விஷயம். அதிலும் ஹீரோயினாகவே இருப்பது அதைவிட பெரிய விஷயம் என, திரிஷாவை லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் நேரடியாகவே பாராட்டி இருந்தார்.
துவக்கத்தில் இருந்தே, திரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மவுனம் பேசியதே, சாமி, ஆயுத எழுத்து, மன்மதன் அம்பு, ஆதி, திருப்பாச்சி, குருவி, கில்லி, கிரீடம், ஜி, பீமா போன்ற பல படங்கள் திரிஷாவுக்கு நல்ல படங்களாக அமைந்து, அவரை முன்னணி நடிகையாக மாற்றியது.
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு சீனியர் நடிகைகளில் ஹீரோயின்களாக நடித்துக்கொண்டு இருப்பது நயன்தாரா, திரிஷா இருவர் மட்டுமே. அனுஷ்கா ஷெட்டி உடல் எடை காரணமாக நடிப்பதே இல்லை. ஹன்சிகா மோத்வானி, சமந்தா போன்றவர்கள் பீல்டில் இருந்தாலும் நேரடியான தமிழ் படங்களில் சில ஆண்டுகளாக அவர்கள் நடிக்கவில்லை.
திரிஷாவுக்கு என்னை அறிந்தால், 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் கம் பேக் படங்களாக அமைந்தன. குறிப்பாக, விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 படத்தில், ஜானு என்கிற ஜானகி கேரக்டரில் பெரிய அளவில் ரீச் ஆனது. இதையடுத்து அவர் பொன்னியின் செல்வன் படத்தில் 2 பாகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த குந்தவை கேரக்டரில் நடித்தார். உயிர் உங்களுடையது தேவி என, ரசிகர்கள் திரிஷாவிடம் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த வயதிலும் அழகில் ரசிகர்களின் மனங்களை மயக்குகிறார்.
கடந்த மாதம் ரிலீஸ் ஆன லியோ படத்தில் திரிஷா, பார்த்திபன் என்ற கேரக்டரில் நடித்த விஜய்க்கு மனைவியாக நடித்தார். அதுவும் ஒரு காட்சியில் விஜய்க்கு உதட்டில் முத்தம் கொடுத்து நடித்து, ரசிகர்களை அதிர்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்த படத்தில் வளர்ந்த 2 பிள்ளைகளுக்கு அம்மாவாக, திரிஷா நடித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
இப்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ. 10 கோடியில் இருந்து, ரூ. 12 கோடியாக உயர்த்தியுள்ளார். இப்போது திரிஷாவும் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். துவக்கத்தில், ரூ. 1.50 கோடியாக இருந்த தனது சம்பளத்தை பொன்னியின் செல்வன் படம் ஹிட் ஆன போது, திரிஷா ரூ. 3 கோடியாக உயர்த்தினார். லியோ படத்தில் ரூ. 4 கோடி சம்பளம் பெற்ற திரிஷா, இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்தி விட்டார். அடுத்த மணிரத்னம் இயக்கத்தில், கமல் படத்தில் திரிஷா நடிக்க இருப்பதால், இப்படி அதிரடியாக திரிஷா சம்பளம் உயர்ந்துள்ளது. ஆனால் விஜய் படத்தில் ரூ. 4 கோடி சம்பளம், அஜீத் படம் என்றதும் ரூ. 10 கோடியாக சம்பளம் மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





