ரஜினி, கமல் என நடிப்பில் இரு துருவங்களாக இருந்தால் ரஜினி, கமல் நட்பை பற்றி ஒருவர் கூட குறை சொல்லிவிட முடியாது. உடன் பிறந்த சகோதரர்களை விட அவர்களது அன்பும், தோழமையும் வேற லெவலில் இருக்கிறது. ஆரம்பம் முதலே ரஜினி, கமல் ரசிகர்கள் பிரிந்து நின்றாலும் ரஜினியை விட்டுக்கொடுக்காத கமல், கமலை விட்டுக்ககொடுத்த கமலை தான் தமிழ் சினிமா பார்த்து வருகிறது.
நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் இருவருமே முன்னேற முடியாது. நம்மை வைத்து தயாரிப்பாளர்கள் முன்னேறி விடுவார்கள் என இருவரும் பேசி முடிவெடுத்து தான் ரஜினி, கமல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தனர். இப்போது இருவருேம தமிழ் சினிமாவில் இரு சிகரங்களாக நிற்கின்றனர்.
லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ரஜினியை, இனிமேல் நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என்று யோசனையும், தைரியமும் கொடுத்தவரே கமல்ஹாசன்தான். சினிமாவில் தனக்கு போட்டியாக இருக்கும் ஒருவரை, யாராவது சம்பளத்தை அதிகரிக்க சொல்வார்களா என்றால், போட்டியாளராக நிச்சயம் கமல் சொல்லவில்லை. ரஜினியின் நண்பராக தான் அதை சொல்லியிருக்கிறார்.
நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ரஜினி ஷெட்டில் நடித்துக்கொண்டிருக்கும் தகவல் கமலுக்கு கிடைக்கிறது. உடனே அங்கு வருவதாக கமல் கூற, இல்லை நான் வருகிறேன் என ரஜினி கூற, இல்லை நானே வந்துவிட்டேன் என, அங்குவந்து ரஜினியை சந்தித்திருக்கிறார் கமல்.
இருவரும் கட்டித்தழுவி பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது என பேசியபடி பேரன்போடு, அவர்கள் அருகருகே நின்றபடி பேசிய வீடியோ, போட்டோ நேற்று மாலை வைரலானது. இதில் ரஜினி மேக்கப்பில் வாலிபர் போல காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின்பு, என்னை தேடி வந்த கமலுக்கு மரியாதையாக, நானும் அவரது ஷெட்டுக்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று, இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு சென்றிருக்கிறார் ரஜினி. ஆனால் அங்கு கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருந்ததால் அந்த புகைப்படங்கள், வீடியோ வெளிவரவில்லை. இப்படி ரஜினி, கமல் நட்பு பலரும் மெச்சும்படியும், வியக்கும் வகையிலும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.





