- Advertisement -
தமிழ் சினிமாவில் நடிகராக இருந்தபோது விஜயுடன் 6 படங்களில் நடித்தவர் நடிகை திரிஷா. இப்போது முதல்வரான பிறகும் விஜயும் திரிஷாவும் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார்கள். இருவரும் ஒரே மாதிரியான ஆடையில் திருமண விழாக்களுக்கு ஒன்றாக வருவது தொடர்கிறது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை திரிஷாவை போட்டியிட வைக்க தவெக கட்சி தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அல்லது திரிஷாவை அடுத்த ஆண்டு தவெக எம்பியாக நியமனம் செய்வதற்கான ஒரு ஆலோசனையும் நடப்பதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





