தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவும், திரிஷாவும் மட்டும்தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார், விக்ரம், தனுஷ், ஷ்யாம், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டும் இன்றி மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். திரிஷா இவரது நடிப்பில் வெளியான சாமி படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு பெற்று கொடுத்து, திருப்புமுனை படமாக அமைந்தது.
தொடர்ந்து விஜயுடன் நடித்த திருப்பாச்சி, ஆதி, குருவி, கில்லி, லியோ டங்கள் பெரிய அளவில் திரிஷாவுக்கு மாஸ் படங்களாக இருந்தன. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு விஜயுடன் திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். அடுத்து அஜீத்குமார் நடிப்பில் வெளிவர உள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களிலும் திரிஷாதான் நாயகியாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து ரசிகர்களை மயக்கிய நடிகை திரிஷா, அடுத்து தக்லைப் படத்திலும் நடித்திருக்கிறார். அதேபோல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.
நடிகை திரிஷா அவ்வப்போது வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் பதிவுகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் டிரண்டிங் ஆகின்றன. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் திரிஷாவின் வாடிக்கையாக இருக்கிறது. ஈசிஆர் ரோட்டில் குடிபோதையில் ஆட்டம், ஐதராபாத் ஓட்டல் குளியல் வீடியோ, கூவத்தூர் விடுதி விவகாரம் என பல சர்ச்சைகளில் திரிஷா சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், நான் மனிதர்களை தவிர்த்து விடுகிறேன், நாய்களை நேசிக்கிறேன். என்னுடைய நாய் மற்ற நாய்களை தவிர்த்து விடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என பதிவு செய்துள்ளார். இப்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.





