- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷிற்கு இன்னொரு முகம் இருக்கு... படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை புட்டு புட்டு வைத்த நடிகை வடிவுக்கரசி......

தனுஷிற்கு இன்னொரு முகம் இருக்கு… படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை புட்டு புட்டு வைத்த நடிகை வடிவுக்கரசி… என்ன இப்படி சொல்லிட்டாங்க….

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு படுபிஸியான நடிகர் யார் என்றால் அது நிச்சயம் தனுசாக தான் இருக்கும். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருப்பதால் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார் அவர். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜீ வி குமார் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர், மதுரை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்க்கும் கேப்டன் மில்லரும், அதன் பின்னணியில் இருக்கும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ், மாரி செல்வராஜுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுபோக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடனும் அவர் இணைகிறார்.

இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நாகார்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். பின்னர் நெல்சன் உடனும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பக்கம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் முன்னதாக, தனது ஐம்பதாவது படத்தை முழு வீச்சுடன் கவனமாக செதுக்கி வருகிறார் தனுஷ்.

- Advertisement -

எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். சென்னை அருகே 600 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை வடிவுக்கரசியும் இணைந்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,

“தனுஷ் சார் என்னை பார்க்க வர வேண்டும் என்று நான் கேட்டறிந்த போது, நானே அவரைப் பார்க்க நேரடியாக அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அவரது இயக்கும் படத்திற்கான கதாபாத்திரம் குறித்து என்னிடம் கூறினார். அலுவலகத்தில் அவ்வளவு அமைதியாக இருந்தார் தனுஷ். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சென்று பார்த்தால் அவர் ஒரு டெரர் போல் காட்சி அளித்தார். அவர் திரும்பிப் பார்த்தாலே உதவி இயக்குனர்கள் பயப்படுவார்கள். அவ்வளவு அழகாக அவர் வேலை வாங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்