லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் – திரிஷா நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய் படம் ரிலீஸ் என்பதை, கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளி, பொங்கல் பண்டிகை போல, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிற நிலையில், லியோ படத்தையும் பெரிய விழாவாக கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழ் சினிமா தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாகின்றனர். படத்தை தரும் இயக்குநர்களும், நடிகர்களும் படத்தின் வெற்றியால் சந்தோஷமடைகின்றனர். குறிப்பாக படத்தின் மூலம் கிடைக்கும் பலமடங்கு லாபத்தில் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க முன் வருகின்றனர். இதனால் பிளாக்பஸ்டர் மூவிகளில், முன்னணி ஸ்டார்கள் நடித்த படங்கள் அடிக்கடி வெளியாகின்றன.
நாடகத்தனமான படங்களாக இயக்கப்பட்ட பீஸ்ட், வாரிசு படங்களின் மெகா ஹிட் தோல்விக்கு பிறகு, விஜய் அதிக நம்பிக்கையுடன் நடித்திருக்கும் படம்தான் லியோ. அதுவும் கைதி, விக்ரம் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியலில் விஜய் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வரும் படமாகவும் லியோ இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 19ம் தேதி, லியோ படம் ரிலீஸ் ஆகிற நிலையில், நாளை 6ம் தேதியில், 10 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஜய் ஆண்டனி, சிநேகா, விக்ரம் பிரபு, திரிஷா போன்றோர் நடித்துள்ள இந்த படங்கள், விஜய் படம் வரும் முன்பே, 2 வாரங்களுக்கு முன்பே திரைக்கு வருகின்றன. இதில் எத்தனை படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிப்படங்களாக போகின்றன என்பது தெரியவில்லை. அதே வேளையில், லியோவுக்கு இந்த படங்கள் போட்டியாகவும் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், விஜய் படம் ரிலீஸ் ஆகிற அதே வேளையில், 20ம் தேதி மற்றொரு படமும் ரிலீஸ் ஆகிறது. அதாவது லியோ 19ம் தேதியும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கிய மார்கழித் திங்கள் என்ற படம் வரும் 20ம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. வெண்ணிலா கபடிக்குழு இயக்குநர், சுசீந்திரன் தயாரிப்பில் இந்த படம் வெளியாகிறது. வெண்ணிலா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், சசீந்திரன் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
ஷாம் செல்வன், நக்சா சரண் ஹீரோ – ஹீரோயின் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தில், இயக்குநர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், 18 ஆண்டுகளாக நடிகராக போராடி பெரிய வெற்றியை பெறாத நிலையில், நடிகர் மனோஜ் இயக்குநராக இந்த படத்தை ரசிகர்களுக்கு தருவதும் குறிப்பிடத்தக்கது. இது, லியோவுக்கு போட்டியாக இருக்குமா என்பதை அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகு தெரிந்துக்கொள்ளலாம்.





