- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ரோஜாவை வம்புக்கு இழுத்த நடிகை வனிதா விஜயகுமார் - என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

நடிகை ரோஜாவை வம்புக்கு இழுத்த நடிகை வனிதா விஜயகுமார் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

- Advertisement -

இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. அவரது அழகும் துள்ளலான நடிப்பும் துருதுருப்பான பேச்சும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ரோஜா ஜோடியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக மாறிய ரோஜா கடந்த 1990களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர். பிறகு ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான அவர், ஆந்திரா அரசியலில் குதித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் எம்எல்ஏவாக அமைச்சராகவும் கடந்த ஆட்சியில் இருந்தார்.

- Advertisement -

இந்த முறை ஆந்திரா சட்டசபை தேர்தலில் அந்த கட்சி பலத்த தோல்வியை சந்தித்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ரோஜா சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ரோஜா நடுவராக பங்கேற்றுள்ளார்.

எப்போதும் பிரச்சனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். வம்பு சண்டைக்கு இவரை விட்டால் ஆளில்லை என்று ரசிகர்களே கூறுவார்கள். இப்போது நடிகை ரோஜாவை அவர் வம்புக்கு இழுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ரோஜா குறித்து வனிதா விஜயகுமார் விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த நேர்காணலில் நடிகை ரோஜா குறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், ரோஜா என்னுடைய குடும்ப நண்பர் தான். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சமையல் கலை நிபுணருக்கான சமையல் நிகழ்ச்சியில் நடுவர் இருக்கையில் அமர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் உண்டு.

அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள நடுவருக்கு அடுத்தபடியாக நடுவர் சீட்டில் அமர நான்தான் தகுதியானவள். ஏனென்றால் நான் ஒரு செஃப் என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். அரசியல் களத்தில் அரசியல்வாதியாக விளாசித் தள்ளிய நடிகை ரோஜா. நிச்சயமாக தன்னை விமர்சித்த வனிதா விஜயகுமாருக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

- Advertisement -

சற்று முன்