- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போறது அந்த மாதிரியான ஒரு கேரக்டரா? - வேற...

வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போறது அந்த மாதிரியான ஒரு கேரக்டரா? – வேற லெவல்ன்னு சொல்ற அளவுக்கு பில்டப் பண்றாங்களே?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தந்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த நிலைக்கு வந்தார். அதே நேரத்தில், சில ஆண்டுகளாக அவரது எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.

குறிப்பாக டான், பிரின்ஸ், மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற படங்கள், இது சிவகார்த்திகேயன் படம்தானா என ஆச்சரியப்படும் அளவுக்கு பிளாப் படங்களாக போய்விட்டன. டாக்டர் மற்றும் மாவீரன் படங்கள் வெற்றியை தந்த நிலையில், அயலான் படம் மிகப் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தில், அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸாகிறது.

அதே போல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் நிறைடடைய இருக்கிறது. அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள வெங்கட்பிரபு படம், ஒரு அரசியல் படமாகும். அதாவது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படம் போல, இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் வர உள்ளதாக கூறப்படும் நிலையில், அரசியலுக்கு விஜய் செல்லும் நிலையில், இப்படி ஒரு அரசியல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது, ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெங்கட்பிரபு இயக்க உள்ள இந்த படத்தில், அரசியல் நெடி அதிகமாக இருப்பதால்தான், சில காட்சிகளை மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். மற்றபடி கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. சம்பள பிரச்னை இருந்தாலும் இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகும், கொடுக்கிற அட்வான்ஸை வாங்கிக்கொண்டு நடியுங்கள் என வெங்கட்பிரபு வற்புறுத்தியதால் இந்த படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சற்று முன்