- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 2 தொகுதிகளில் போட்டியிட திரிஷா தான் காரணம், அவரும் அரசியலுக்கு விரைவில் வருவார் -...

விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட திரிஷா தான் காரணம், அவரும் அரசியலுக்கு விரைவில் வருவார் – நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நாளை சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதிமுக திமுக கட்சிகளுக்கு மாற்றாக களத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவாரா, அவரது தலைமையில் புதிய ஆட்சி அமையுமா என்று பெரும்பாலான மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட நடிகை திரிஷா தான் காரணம் என்று பிரபல நடிகை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பெயர் வெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட காரணமே திரிஷா தான். அதாவது விஜய் இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.

- Advertisement -

அதில் ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்து விட்டு அதில் திரிஷாவை போட்டியிட வைப்பார். திரிஷா அதற்கு தகுதியானவர்தான். நன்றாக படித்தவர். நன்கு ஆங்கிலம் பேசுபவர். திரிஷா ஜெயலலிதாவை போல தான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நன்னடத்தைக் கொண்டவர். புத்திசாலி. மரியாதை தெரிந்தவர்.

எனக்கு திரிஷாவை ரொம்ப பர்சனலாகவும் தெரியும். அவர் அரசியல்வாதியாக இருப்பதற்கு மிகவும் தகுந்த தகுதி வாய்ந்தவர். அவர் கட்டாயம் அரசியலில் களமிறங்குவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. திரிஷா போன்ற ஒரு பெண் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும்.

- Advertisement -

அனைவரும் விஜய் திரிஷா அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்த விவாதங்களை விட்டுவிட்டு இருவருக்கும் எந்த அளவுக்கு அறிவும் திறமையும் இருக்கிறது என்று பாருங்கள். ஒருவரின் மனைவி காதலி என்று அடையாளம் மட்டுமே பெண்ணுக்கு கிடையாது. அதையும் கடந்து அவருக்கும் தனிப்பட்ட அடையாளம் உண்டு.

அறிவு உள்ளது திறமை உள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து மற்றவர்கள் மிகவும் கொச்சையாக பேசுவதை பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதில் ஒரு தொகுதியில் தவெக சார்பில் திரிஷா மீண்டும் போட்டியிட்டு ஜெயிப்பார் என்ற வனிதா விஜயகுமாரின் இந்த கருத்து அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்