- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் ஜெயித்தது எப்படி? சீனியர் நடிகர் சொன்ன சீக்ரெட் கேட்டு...

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் ஜெயித்தது எப்படி? சீனியர் நடிகர் சொன்ன சீக்ரெட் கேட்டு அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. திமுக அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சி ஆதரவுடன் மிக குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று கடும் தோல்வியை சந்தித்துள்ளன.

இதுகுறித்து சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார்.

- Advertisement -

மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்க்யூமென்ட் குளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள்.

அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக விஜய் குடும்பத்தை எங்களுக்குத் தெரியும்.

- Advertisement -

அவர் ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக இருந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லா மக்களுக்கும் என்று நான் சொல்லும்போது மதச் சார்பின்றி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி எல்லாருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையோடு அவரை நான் வாழ்த்துகிறேன்.

கொஞ்சம் பாலைவனமாகிவிட்ட தமிழ்நாட்டை மீண்டும் ஒரு சோலைவனமாக்க வேண்டும் திரு. விஜய் என்று அவரை வாழ்த்துகிறேன். இதில் அரசியல் கிடையாது, வேறு எதுவும் கிடையாது. ஒரு பொதுவான குடிமகனாக புது தலைவர்களை நான் வாழ்த்துகிறேன், அவ்வளவுதான். நன்றி என்று நடிகர் ஒய் ஜி மகேந்திரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்