- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய கனவு இன்று நிஜமாகி இருக்கிறது… நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி மகிழ்ச்சி - அட...

என்னுடைய கனவு இன்று நிஜமாகி இருக்கிறது… நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி மகிழ்ச்சி – அட இது வேற லெவல்தான் போங்க…!

- Advertisement -

நடிகர் சரத்குமாரின் 2வது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சரத்குமாரை ராதிகா 3வது திருமணம் செய்திருக்கிறார். ஏற்கனவே ராதிகாவுக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், 3வதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார்.

சரத்குமார், நடிகராக சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே மும்பையில் இருந்த போது சாயாதேவி என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள்தான் வரலட்சுமி சரத்குமார். போடா போடி படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து சண்டக்கோழி 2 சர்கார் தாரை தப்பட்டை கன்னிராசி 2 நீயா 2 ஹனுமான் மாரி 2 மதகஜ ராஜா ராயன் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்த வரலட்சுமிக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை அவர் மணந்து கொண்டார்.

இந்நிலையில் பிரபல பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் உடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். இயக்குனர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. Rizana-a- Caged Bird என்ற திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது.

- Advertisement -

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, அகாடமி விருது பெற்ற ஜெர்மி ஐயன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த படம் ஸ்கார் ஃப்ரம் த லயன் கிங். எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால் அந்த படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கும் மனப்பாடமாக தெரியும்.

அந்த கிங்குக்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார். இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். அவருடன் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். என்னுடைய கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. ஹாலிவுட் மட்டுமல்ல உலக சினிமா ரசிகர்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு நடிகர் அவர் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்