- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் குழந்தை பெத்துக்க விரும்பலே, ஏற்கனவே நான் தாயாக இருக்கேன் - உண்மையை போட்டுடைத்த நடிகை...

நான் குழந்தை பெத்துக்க விரும்பலே, ஏற்கனவே நான் தாயாக இருக்கேன் – உண்மையை போட்டுடைத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இப்போதும் குணசித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அவரது முதல் மனைவி சாயாதேவி. இவரை காதலித்து சரத்குமார் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சிம்புவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து சர்கார் சண்டக்கோழி 2 தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

சண்டக்கோழி 2 சர்கார் போன்ற சில படங்களில் வில்லி கேரக்டரில் ராதிகா சரத்குமாரின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது. ஆனால் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் தமிழில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிடைக்காத நிலையில் தெலுங்கு படங்களில் அவர் நடித்தார். அங்கு அவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

கடந்தாண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். எனினும் வரலட்சுமி சரத்குமார் அவருக்கு 2வது மனைவி ஆனார். நடிகர் சரத்குமாரின் 2வது மனைவி நடிகை ராதிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, தாய்மை என்பது மிகவும் பெரிய விஷயம்தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால்தான் தாய் என்பது இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. ஒருவேளை இந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம்.

நான் என்னுடைய தங்கைக்கு தாய்க்கு தாயாக இப்போது இருக்கிறேன். என்னை சுற்றியுள்ளவர்களை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அதுதான் என்னை பொருத்தவரை தாய்மை. ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று முடிவெடுப்பதே பேரண்டிங்கில் சிறந்த முடிவுதான் என்று அந்த நேர்காணலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்