- Advertisement -
Homeபொழுதுபோக்குசியான் விக்ரம், ரவி மோகன் இருவரில் முந்தப் போவது யார் - வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள்...

சியான் விக்ரம், ரவி மோகன் இருவரில் முந்தப் போவது யார் – வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான படம் வீரதீர சூரன். பண்ணையாரும் பத்மினியும் சித்தா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். 2ம் பாகமாக உருவான இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வீர தீர சூரன் படம் முதல் பாகம் முதலில் வெளிவராமல் 2ம் பாகம் வெளிவருகிறது. அதன்பிறகு இந்த படத்தின் முன் பகுதியாக வீரதீர சூரன் முதல் பாகம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் நிச்சயமாக சியான் விக்ரம் சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் வீர தீர சூரன் படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்டது. பிறகு டிசம்பரில் நிறைய படங்கள் வெளியானதால் பொங்கல் பண்டிகைக்கு மாற்றப்பட்டது. அப்போது விடாமுயற்சி ரிலீஸ் தகவல் வெளியானதால், பிறகு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்ட விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸாகிறது.

இப்படி மற்ற பெரிய படங்களில் ரிலீஸ் காரணமாக வீரதீர சூரன் படம் ரிலீஸ் தள்ளி தள்ளிப் போய் இப்போது வருகிற மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என்ற முடிவுக்கு படக்குழு முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த 2 வாரங்களில் ஏப்ரல் 10ம் தேதி அஜீத்குமாரின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லிக்கடை படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

- Advertisement -

மார்ச் 27ம் தேதி வீர தீர சூரன் படம் சோலோவாக வெளியிடலாம் என்று திட்டமிட்ட படக்குழுவுக்கு, இப்போதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தில் பெரிய பொருட்செலவில் உருவான ரவி மோகன் நடித்த ஜீனி படம் வருகிற மார்ச் 27ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொடர் தோல்விகளை தந்துவரும் நடிகர் ஜெயம் ரவி என்ற, இப்போது ரவி மோகன் என பெயரை மாற்றிக்கொண்ட நடிகருக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளியான அவரது காதலிக்க நேரமில்லை படமும் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் மார்ச் 27ம் தேதி முந்தப் போவது சியான் விக்ரமா, ரவி மோகனா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏதேனும் ஒருவர் வந்தால் நல்லது என விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்