பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிகர் சூர்யாவுக்கு நடித்தவர் விஜயலட்சுமி. அதன்பிறகு எஸ் மேடம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராமச்சந்திரா பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார். இப்போது பெங்களூருவில் தன் சகோதரியுடன் அவர் இருந்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பிறகு சீமான் ஏமாற்றி விட்டதாக கோர்ட்டில் விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்த விவகாரம் எல்லாம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்னையில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு இயக்குனர் சீமானை தாறுமாறாக விமர்சித்தது மட்டுமின்றி தகாத வார்த்தைகளில் அவரை திட்டுவதும் விஜயலட்சுமியின் வழக்கமாக இருந்தது. இதற்கிடையே தவெக கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் அக்கட்சி சார்ந்த சிலர் சீமானை மட்டுமின்றி அவருடன் சம்பந்தப்படுத்தி நடிகை விஜயலட்சுமியையும் தாறுமாறாக பேசி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது, இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு நான் சப்போர்ட்டிவா பேசின உடனே அடுத்து சொல்லிடுவாங்க.
நாம் தமிழர் கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஒரு பெரிய தொகையை விஜயலட்சுமிக்கு செட்டில் பண்ணிட்டார். அதுதான் அவங்க அந்தப் பக்கம் பேசிட்டாங்க அப்படின்னு. ஒண்ணும் கிடையாது. என்னை இதுவரைக்கும் பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது. எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா நானே பேசுவேன். நான்தான் இத்தனை நாளா நாம் தமிழர் கட்சியை எதிர்த்துக்கிட்டு இருந்தேன் இல்லையா? ஆனா நான் ஒரு வாரமா பாக்கறேன். ஒருத்தங்க தப்பு பண்ணியதை தப்புன்னு உணர்ந்து அவங்க திரும்பவும் ஒரு வாய்ப்பு கேட்கும் போது அவர்களை வாழ விடணும்.
அதுதான் மனித நேயம்ன்னு சொல்றது. அதைத்தான் நான் பண்ணினேன். ஆனால் நானும் பார்க்கிறேன். சும்மா பேச்சு எடுத்தா என்னையும் கொச்சைப்படுத்திகிட்டு நாம் தமிழர் கட்சியையும் கொச்சைப்படுத்தி நீங்க இதைத்தான் பண்ணிட்டு இருக்க போறீங்களா? ஐயம் ரெடி. இனிமேல் என்னோட வழக்கை பற்றி யாராவது குத்திக்காட்டி பேசினீங்கன்னா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக உறுதியாக பேசுவேன் என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.





