- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்க காணோமேன்னு நினைச்சோம், இதோ வந்துட்டாங்களே? - திரிஷா விவகாரம் குறித்து குஷ்புவுக்கு கேள்வி கணைகளை...

எங்க காணோமேன்னு நினைச்சோம், இதோ வந்துட்டாங்களே? – திரிஷா விவகாரம் குறித்து குஷ்புவுக்கு கேள்வி கணைகளை தொடுத்த சர்ச்சை நாயகி

- Advertisement -

லியோ படத்தில் திரிஷா உடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என காமெடியாக பேசினார் மன்சூர் அலிகான். ஆனால் அவர் காமெடி என நினைத்து பேசியது, வேறு மாதிரியாக விஸ்வரூம் எடுக்க, இப்போது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு போய்விட்டது.

இந்த விஷயத்தில், பாஜக கட்சி நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, அதிக ஆர்வம் காட்டி, தேசிய மகளிர் ஆணையம் மூலமாக நடவடிக்கை எடுத்தார். தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீஸ் டிஜிபிக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே, மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அடுத்து, எப்போதும் சீமானுடன் மோதிக்கொண்டு இருக்கும் முன்னாள் கதாநாயகி விஜயலட்சுமி, இன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் திரிஷா விஷயத்தில் இத்தனை சீக்கிரமாக களத்தில் இறங்கி வேலைபார்த்த குஷ்பு, தனக்கு நடந்த அநீதிக்கு மட்டும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கோணத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் குஷ்புவுக்கு பல கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.

- Advertisement -

திரிஷா, மன்சூர் அலிகான் பிரச்னை தமிழிசை சவுந்தர்ராஜன் வரைக்கும் போயாச்சு. தேசிய மகளிர் ஆணையத்தின் மூலமா புகார் சொல்லி ஆக்‌ஷன் எடுப்பேன்னு சொன்னாங்க, அதே மாதிரி பண்ணிட்டாங்க. அடேங்கப்பா, பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்க.

கடந்த ஆகஸ்ட் மாசத்துல, சீமான் மேல புகார் சொன்ன என்னைய, வீரலட்சுமியை ரொம்பவும் கொச்சைப்படுத்தி சீமானும், அந்த கட்சிக்காரங்களும் அவ்வளவு அசிங்கமாக திட்டுனாங்க. கேவலமா பேசுனாங்க. அத்தனை ஆபாச வார்த்தைகளில் அவர்கள் பேசினாங்க.

- Advertisement -

இதனால் எனக்கு ரொம்பவும் எனக்கு மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. சீமான் பேசுன வீடியோவை அனுப்பி, நடவடிக்கை எடுங்கன்னு குஷ்புகிட்ட புகார் சொன்னேன். ஆனா குஷ்பு மேடம் அதை கண்டுக்கவே இல்ல. ஒரு நடவடிக்கையும் எடுக்கல. பாஜகவுக்கு பிரச்னைன்னா சீமான் வந்து குரல் கொடுக்கறாரே, அதுக்கான நன்றியா என கேட்டுள்ளார் முன்னாள் ஹீரோயின் விஜயலட்சுமி.

- Advertisement -

சற்று முன்