- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தை வைத்து செல்வராகவன் தொட்ட கதையை கையில் எடுத்திருக்கிறாரா தனுஷ்... காசிமேடு பட பின்னணியை நினைவு...

அஜித்தை வைத்து செல்வராகவன் தொட்ட கதையை கையில் எடுத்திருக்கிறாரா தனுஷ்… காசிமேடு பட பின்னணியை நினைவு கூறிய பரத்…

- Advertisement -

பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத். முதல் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடித்த அவர், ஐந்து இளைஞர்களில் ஒருவராக வந்து போனார். இதையடுத்து, திடீரென மலையாள உலகத்திற்கு சென்ற நடிகர், அங்கு 4 ஸ்டூடன்ஸ் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியானது. இன்று வரைக்கும் அந்த படத்தின் லட்சாவதியே பாடல், இளைஞர்களின் விருப்ப பாடல்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதன்பிறகு, தமிழில் விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் பரத். பாய்ஸ் படத்தில் நடித்த இளைஞர், செல்லமே-வில் வில்லனாக அசத்தியிருப்பதாக பலரும் பாராட்டினர். தொடர்ந்து முன்னணி ஹீரோவுக்கான ரேஸில் ஓடிய பரத்துக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் காதல்.

மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், மெக்கானிக் முருகனை வாழ்ந்த பரத், இறுதியில் காட்சி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து ரசிகர்களை மனங்களை உலுக்க செய்தார். இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் பரத்.

பின்னர் பட்டியல், எம். மகன், வெயில் திரைப்படங்கள் மூலம் தனது இருப்பை தக்கவைத்த நடிகர், தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். மாறுப்பட்ட கதையை தேர்வு செய்த நடித்த அவருக்கு, பிற்காலத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியையே கொடுத்தன. கண்டேன் காதலை, வானம் என அவ்வபோது சில படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை கொடுத்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பரத் இன்று வரை திணறி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பேசியிருக்கும் பரத், 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நான் நடிக்க இருந்ததாக கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். மூன்று ஹீரோக்கள் கொண்ட இந்த கதையில், முக்கிய ஹீரோவாக அஜித் நடிக்க இருந்ததாகவும், அவருடன் தனுஷும், நானும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறியிருக்கிறார். காசிமேடு என பெயர் வைக்கப்பட்ட அந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் நின்று போனதாக கூறியிருக்கும் பரத், அந்த படம் எடுக்கப்பட்டிருந்தால் தனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்திருக்கும் என பேசியிருக்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது காசிமேடு படத்தின் கதையைதான் தனுஷ் எடுத்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. மூன்று ஹீரோக்கள் கொண்ட அந்த சப்ஜெக்ட்டை செல்வராகவன் கையில் எடுத்து தவறிவிட, தற்போது அதனை தனுஷ் கெட்டியாக பிடித்திருப்பதாகவும், இதுதான் தனுஷின் 50வது படமாக உருவாவதாகவும் பேசப்படுகிறது. இதிலும் தனுஷ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிப்பதால், நிச்சயம் இது காசிமேடு கதைதான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சற்று முன்