- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் குழந்தை பெத்துக்க வேண்டாம் என்று முடிவு செய்ய அதுதான் காரணம், மாஜி லேடி சூப்பர்...

நான் குழந்தை பெத்துக்க வேண்டாம் என்று முடிவு செய்ய அதுதான் காரணம், மாஜி லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஓபன் டாக்!

- Advertisement -

கடந்த 1980, 90களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் விஜயசாந்தி. தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி சண்டை காட்சிகளில் விஜயசாந்தி அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் மீனா, அவரது தங்கையாக நடித்திருந்தார். இந்த படம்தான், பிறகு சினேகா போலீஸ் அதிகாரியாக நடித்த பவானி என்ற பெயரில் வெளியானது.

- Advertisement -

அதே போல், பி வாசு இயக்கிய மன்னன் படத்தில், ரஜினிக்கு மனைவியாக விஜயசாந்தி நடித்திருப்பார். ரஜினியை எதிர்த்து நிற்கும் கேரக்டரில் அவர் நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக இருந்ததால்தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாவில் விஜயசாந்தியை அழைத்தார்கள். இப்போது நயன்தாரா, அந்த பட்டத்தை தானே போட்டுக்கொண்டார்.

சினிமாவில் மார்க்கெட் சரிந்த நிலையில், தெலங்கானாவில் தீவிர அரசியல் ஆர்வம் காட்டினார் விஜயசாந்தி. அந்த காலகட்டத்தில் அவருக்கு அரசியலில் நிறைய எதிர்ப்புகளும், பிரச்னைகளும் இருந்தது. ஆனால் இப்போது அரசியலில் பெரிய வரவேற்பு இல்லாத நிலையில், விஜயசாந்தி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை விஜயசாந்தி கூறியதாவது, திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் எங்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் இது நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். குழந்தை எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தை என்பது பெண்ணுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்.

ஆனால் எங்கேயோ ஒரு இடத்தில், எனக்கு குழந்தைகள் இருந்தால் அதை வைத்து தெலங்கானாவில் பிளாக்மெயில் செய்வார்கள் என்ற ஒரு எண்ணம் வந்தது. அப்போது அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலைதான் அரசியலிலும் இருந்தது. எனது கணவரிடம் இதுபற்றி கூறிய போது அவரும் புரிந்துக்கொண்டு சரி என்றார். அதனால்தான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று விஜயசாந்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்