- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து இயக்குனர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் தனுஷ், ஆனா இன்னும் கதாநாயகியை...

லப்பர் பந்து இயக்குனர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் தனுஷ், ஆனா இன்னும் கதாநாயகியை முடிவு செய்ய முடியலையே? – அப்செட்டில் தமிழரசன் பச்சமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சில படங்கள் வரிசையில் லப்பர் பந்து படத்துக்கும் முக்கிய இடம் உண்டு. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் சகல விதங்களிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கதைக்களத்தில் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்துக்கு மத்திய அரசின் 72வது தேசிய விருது பட்டியலில் ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

லப்பர் பந்து படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை தனது 2வது படமாக தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். ஆடி மாதம் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளது. மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படம் உருவாக உள்ளது. மதுரையே படத்தின் கதைக்களம் என்பதால் அங்கேயே அலுவலகம் அமைத்து துணை நடிகர்கள் தேர்வு செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இதுவரை இந்த படத்துக்கு கதாநாயகி கமிட் செய்யப்படவில்லை. முதலில் லப்பர் பந்து நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அடுத்து மமீதா பைஜூ அதைத் தொடர்ந்து ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த நிமிடம் வரை இவர்களில் யாரும் அந்த படத்தில் நாயகியாக உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் கதாநாயகி கேரக்டர் மிகவும் வலுவானது. அந்த படத்துக்கே பெரிய பக்கபலமாக அந்த கதாநாயகியின் கேரக்டர் உள்ளது. அதனால் அதற்கேற்ப சிறந்த நடிகையாக அவர் இருக்க வேண்டும். குறிப்பாக பெர்ஃபாமன்ஸ்சில் வேற லெவலில் அசத்த வேண்டும் என்று இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தொடர்ந்து கதாநாயகிகளை ஆடிஷன் வைத்து தேடி வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட நடிகைகள் ஆடிஷனில் கலந்துள்ளனர்

அதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மமீதா பைஜூ ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரும் அடங்குவர். அந்த படத்துக்கு தகுந்த கதாநாயகி வேண்டும் என்ற ஒரு முடிவில் இயக்குனர் இருந்து வருகிறார். ஆனால் லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகாவை இந்த படத்தில் நடிக்க வைக்க முடியாது. ஏனென்றால் அவர் தனுஷூக்கு அக்கா போல் காட்சியளிப்பார் என்பதால் அவரை தவிர்த்துவிட்டு மற்ற நடிகைகளை தேர்வு செய்து வருகிறார். அதனால் நல்ல பெர்ஃபாமன்ஸ் காட்டும் நடிகைக்கு தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்