- Advertisement -
Homeபொழுதுபோக்குவேலைக்காரன் பட விழாவில் அப்படி பேசியது மறந்து விட்டதா? அனிருத்தை பார்த்து மனம் மாறிடுச்சா? -...

வேலைக்காரன் பட விழாவில் அப்படி பேசியது மறந்து விட்டதா? அனிருத்தை பார்த்து மனம் மாறிடுச்சா? – நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு சரிதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த பல படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் வேலைக்காரன் காக்கி சட்டை மாவீரன் டாக்டர் அமரன் போன்ற படங்கள் அவரை பெரிய நட்சத்திர நடிகராக உருவாக்கி விட்டது.

இப்போது அவர் தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சொந்தமாக தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துள்ளது.

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா டைரக்ட் செய்து இருந்தார். இவர் நடிகர் ரவி மோகனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்காரன் படத்தில் நயன்தாரா பகத் ஃபாசில் சார்லி ரோகிணி ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

இந்த படம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படம். கார்பரேட் நிறுவனங்களின் தில்லுமுல்லுகளை தோலுரித்து காட்டிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நான் எந்த காலத்திலும் விளம்பர படங்களில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று ஒரு உறுதிமொழியாக விழா மேடையில் பேசியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்து வருகிறார். அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளரும் காலகட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது வளர்ந்துவிட்ட பிறகு அதை மறந்துவிட்டு விளம்பர படங்களில் நடிப்பது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் சிவகார்த்திகேயனின் மிக நெருக்கமான நண்பர். அவர் இசையமைப்பதை காட்டிலும் விளம்பர படங்களில் நடித்து ஏராளமான வருமானம் ஈட்டி வருகிறார்.

தனது நண்பர் அனிருத்தின் விளம்பர வருமானத்தை பார்த்து அதனால் சிவகார்த்திகேயனும் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கி விட்டாரா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதே போல் நடிகர் அஜீத்குமாரும் ஒரு காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் தான். அவரும் இப்போது விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்