- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு, அட எதுக்குப்பா இத்தனை மாதம் தள்ளி போடறீங்க?...

அமரன் படம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு, அட எதுக்குப்பா இத்தனை மாதம் தள்ளி போடறீங்க? – அதிருப்தியடைந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த பொங்கல் பண்டிகையன்று அவர் நடித்த அயலான் படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம், ரசிகர்களுக்கு போதிய திருப்தியை தராததால், சரியாக போகவில்லை. 6 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த படம் தோல்வியடைந்தது.

அதன்பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், எஸ்கே 23 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட மொழியைச் சேர்ந்த சென்சிடிவ் நடிகை ருக்மணி நாயகியாக நடிக்கிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்துக்கு முன்பே, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் அமரன். இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ராணுவ கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய காட்சிகள் மீதம் இருந்ததால், ஏஆர் முருகதாஸ் அனுமதியுடன் 20 நாட்கள் இடைவெளியில், அமரன் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் சில வாரங்களுக்கு முன் கலந்துக்கொண்டார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதில் இந்து முஸ்லிம் பிரிவினை பேசும் காட்சிகள் இருப்பதாக, சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனால் படத்தில் தேவையற்ற காட்சிகளை நீக்கவும் படக்குழு அப்போதே தீர்மானித்தது.

இப்போது அமரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 27ம் தேதி அமரன், தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. வேட்டையன், கங்குவா, தி கோட், இந்தியன் 2, கேம் சேஞ்சர், எல்ஐசி, விடாமுயற்சி என பெரிய படங்கள் வரிசையாக வர உள்ள நிலையில், அந்த படங்கள் வந்த பிறகு, எந்த படமும் போட்டியில்லாத ஒரு சூழலில் செப்டம்பர் 27ல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கே என்று, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்