“பாகுபலி” புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. இத்திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக கிரீத்தி செனான் நடித்துள்ளார். மேலும் சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

“ஆதிபுருஷ்” திரைப்படம் ராமாயண கதையை மீட்டுருவாக்கம் செய்து படமாக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்றே வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோது பலரும் பொம்மை திரைப்படம் போல் இருப்பதாக கேலி செய்தனர்.
ஆதலால் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்றும் விதமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்தது. அதன் படி வருகிற 16 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை ஓம் ராவ்த் என்பவர் இயக்கியுள்ளார். டி சீரீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் பேன் இந்திய திரைப்படமாக இத்திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் தற்போது படக்குழு இத்திரைப்படத்தை குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் “ஆதிபுருஷ்” வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் கடவுள் ஹனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரே ஒரு இருக்கை மட்டும் விற்பனைக்கு விடாமல் ஹனுமனுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் பல விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
“ஆதிபுருஷ்” திரைப்படம் ரூ.500 கோடி செலவில் உருவாகியுள்ளது. “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள திரைப்படமாக “ஆதிபுருஷ்” திரைப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





