பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் ஏலியன் பொம்மை நடித்திருப்பதால், பலரது கவனமும் அந்த பக்கம் மீது திரும்பியது.
அடுத்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம், சாணிக்காயிதம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியானது. இதில் சிவராஜ்குமார் நடித்திருந்ததால் பலரும் படம் பார்க்க ஆவலாக சென்றனர். ஆனால் படத்தில் சில காட்சிகள் மட்டுமே அவர் வருகிறார். மத்தபடி படம் முழுக்க தனுஷ் துப்பாக்கி எடுத்துச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்.
விஜய் சேதுபதி கத்ரினா கைப் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம், ஏற்கனவே பிளாப் ஆன படத்தின் கதை என்பதால், அது இந்த லிஸ்ட்டில் வரவே இல்லை. பான் இந்தியா படமாக, உலகம் முழுக்கவும் அந்த படத்துக்கு கிடைத்த வசூல் மொத்த 2.5 கோடி ரூபாய்தான்.
இந்நிலையில் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும், பொங்கல் பண்டிகை படங்களில் முதலிடம் பெற தகுதியானது இந்த படம்தான் என பாராட்டி வருகின்றனர்.
ஆனால் பொங்கல் பண்டிகை ரிலீஸில் பெரும்பாலான தியேட்டர்களை அயலான், கேப்டன் மில்லர் ஆக்கிரமித்துக்கொண்டதால் இந்த படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் வெறும் 80 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. படம் வரவேற்பு பெற்றதால், தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக இப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மிஷன் சாப்டர் 1 படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய படத்தின் இயக்குநர் விஜய், இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆனதால், எங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பிரிவ்யூ ஷோ போவது போல் இருந்தது. படம் ரிலீஸான பீலிங்கே வரவில்லை. ஆனால் படத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்த ரெஸ்பான்ஸ் காரணமாக, தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். எனது வழக்கமான ஸ்டைலில் இருந்து, வேறொரு ஜானரில் மாறி இந்த படத்தை தந்திருக்கிறேன். அச்சம் என்பது இல்லையே என்பதுதான் படத்தின் டைட்டில். அதை மிஷன் என்று மாற்றி, அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்றது லைக்கா நிறுவனம்தான், என்று பேசியுள்ளார் இயக்குநர் விஜய்.





