- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் மொக்கை ஆனதற்கு இதுதான் காரணமா? அந்த படத்தை நான் எடுத்திருந்தால்… - ...

லியோ படம் மொக்கை ஆனதற்கு இதுதான் காரணமா? அந்த படத்தை நான் எடுத்திருந்தால்… – டைரக்டர் நெல்சன் போட்டாரே போடு!

- Advertisement -

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய படங்கள், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. குறிப்பாக கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனர். இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். காமெடி பிளஸ் ஆக்சன் கலந்த இந்த படம் போதைப் பொருள் கடத்தலை மையமாகக் கொண்டது.

இந்த படத்தில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி காமெடி நடிப்பில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய இரண்டாவது படம் டாக்டர். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில்தான் பிரியங்கா மோகன் அறிமுகமானார். இந்த படமும் மிகப்பெரிய அளவில், ரசிகர்களின் மனம் கவர்ந்தது.

கோலமாவு கோகிலா, பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து டைரக்டர் நெல்சன் இயக்கிய படம், விஜய் நடித்த பீஸ்ட். இந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்து நிலையில் படம், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து டைரக்டர் நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய படம் ஜெயிலர். இந்த படம் மாஸ்ஹிட் படமாக ரஜினிக்கு அமைந்தது. தர்பார், அண்ணாத்த போன்ற தோல்வி படங்களை தந்து அப்செட்டில் இருந்த ரஜினிகாந்தை இந்த படம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது.

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கூலி என்ற பெயர் ஏற்கனவே அமிதாபச்சன் நடித்த இந்தி படம் என்பதும், தமிழில் சரத்குமார் மீனா நடித்த படம் கூலி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி படத்தின் டைட்டிலேயே காப்பியடித்த டைரக்டர் லோகேஷ் கனகராஜை, நெட்டிசன்கள் கழுவிகழுவி ஊற்றி வருகின்றனர்.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் டைரக்டர் நெல்சன் திலிப் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லியோ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த அவர், நான் லியோ படத்தை இயக்கியிருந்தால் விஜயுடன் மம்முட்டி, ஷாருக்கான், மகேஷ்பாபு ஆகியோரையும். கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டையும் நடிக்க வைத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்