- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி - லோகேஷ் கனகராஜ் படத்தில் இப்படி ஒரு சுவாரசியமா... அதுவும் இது எப்போது எழுதப்பட்ட...

ரஜினி – லோகேஷ் கனகராஜ் படத்தில் இப்படி ஒரு சுவாரசியமா… அதுவும் இது எப்போது எழுதப்பட்ட கதை தெரியுமா?…

- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளன. மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ் என ஏராளமான நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து நான் ரெடி தான் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கூல் செய்யும் விதமாக படத்திலிருந்து இரண்டாம் பாடல் வெளியிடப்பட்டது.

- Advertisement -

தொடர்ந்து லியோ ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில், நடிகர் விஜய் பார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், காஷ்மீரில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவரை எப்போதும் வில்லன் கும்பல் துரத்திக் கொண்டிருக்க, கௌதம் மேனன் விஜய்க்கு உதவுவது போலவும், விஜய் தான் லியோ என்பது போலவும் சில குறிப்புகள் உணர்த்தியிருந்தன.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ், லியோவிற்கு முதலில் ஆண்டனி என்றுதான் பெயர் வைத்ததாக கூறினார். பின்பு நீண்ட ஆலோசனைக்கு பிறகு அதன் டைட்டில் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் படத்தில் ஆறு நிமிஷங்கள் தொடர்ந்து ஓடும் ஷாட் ஒன்று இருக்கிறதாம்.

- Advertisement -

வரும் 19ஆம் தேதி லியோ வெளியாகும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் உடன் லோகேஷ் கனகராஜ் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்க உள்ளது. படத்திற்கான கதையின் ஒன்லைன்னை லோகேஷ் ரஜினிகாந்திடம் கூறியதும், அவர் உற்சாகம் அடைந்து விட்டாராம்.

சமீபத்தில் கூட லோகேஷிடம் போனில் பேசிய ரஜினிகாந்த், படத்தின் தூள் கிளப்பிறலாம் கண்ணா என்று கூறியிருக்கிறார். இந்த படத்திற்கான கதையை லோகேஷ் இப்போது எழுதவில்லையாம். மாநகரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த கதையை ரெடி செய்திருக்கிறாராம் லோகேஷ். வேறு ஏதாவது ஒரு ஹீரோவை வைத்து இந்த படம் எடுக்க அவர் விருப்பப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில்தான் ரஜினி உள்ளே வந்திருக்கிறார். இதற்கான ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டதாம். லியோ படத்தைப் போல் இந்த முறை, ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்காமல் பொறுமையாக படத்தை இயக்க லோகேஷ் திட்டமிட்டு உள்ளாராம்.

- Advertisement -

சற்று முன்