தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கடைசியாக தமிழில் தனுஷ் நடித்த இட்லி கடை படம் வெளியானது. இந்தியில் தனுஷ் நடித்த தேரே இஸ்க் மெய்ன் என்ற படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கடந்த 2024ம் ஆண்டில் பிரிந்து விட்டனர்.
தற்போது நடிகர் தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல் பரவிய நிலையில் இப்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதாராமம் படத்தின் நாயகியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் மிருணாள் தாகூர். தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ஆனால் நடிகை மிருணாள் தாகூர் நேரடியாக தமிழில் இதுவரை நடிக்கவில்லை. இந்தியில் மிருணாள் நடித்த சன் ஆஃப் சர்தார் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வைரலானது. மேலும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவிட்டு வந்ததும் இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தியது. ஆனால் இதுபற்றி தனுஷ் மிருணாள் இருவருமே தங்களது தரப்பில் விளக்கம் தரவில்லை. அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
நீண்ட நாட்களாக தனுஷ் மிருணாள் தாகூர் இருவரும் மிக நெருக்கமாக காதலித்து வரும் நிலையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூரின் குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருமணம் எளிமையான முறையில் திருப்பதி கோவிலில் நடக்கலாம் என்றும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்தியா இல்லை உண்மையா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் வழக்கம் போல் இதுவும் ஒரு கட்டுக்கதை உருட்டுதான் என்று தனுஷ் ரசிகர்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.





