- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி சார் விஷயத்தில் நான் பேராசைப்படுகிறேனோ என்றெல்லாம் தோன்றியது... மனதில் பட்டதை போட்டு உடைத்த இயக்குனர்...

ரஜினி சார் விஷயத்தில் நான் பேராசைப்படுகிறேனோ என்றெல்லாம் தோன்றியது… மனதில் பட்டதை போட்டு உடைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்…

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு கடைசியாக வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தின் மீது அந்த அளவுக்கு எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆனால் ரிலீசான சமயத்தில், விமர்சன ரீதியாக அது வரவேற்பு பெற பலரும் அதனை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பூஜா ஹெக்டே படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் பாரிவேல் கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் சூர்யா. அவர் தூத்துக்குடி வட்டார மொழியை பேசுகிறாராம். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அண்மையில் வெளியான கனிமா பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வரும் மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தன்னை எப்போதும் ரஜினி ரசிகராகவே காட்டிக் கொள்வார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தான் செல்லும் மேடைகளில் எல்லாம் இதை கூறுவார். அவரின் வாழ்நாள் ஆசையாக ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். முழுக்க முழுக்க ஃபேன் பாய் சம்பவமாக அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

அதில் ஒவ்வொரு காட்சிகளிலும் விண்டேஜ் ரஜினியை அழைத்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஆக்சன் பானியில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினிகாந்தை சந்தித்த அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார் இயக்குனர். அதில், பேட்ட திரைப்படத்திற்கு பிறகு பலமுறை ரஜினி சாரை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். ஆனால் எதுவும் சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை.

ஒரு கட்டத்தில் எனக்கே நாம் ஏன் அவருடன் படம் செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். அதுதான் ஒரு படம் எடுத்து விட்டோமே. ஒருவேளை நான் மிகவும் பேராசைப்படுகிறேனா என்று தோன்றியது. உடனடியாக அவரிடம், சார் இனிமேல் உங்களிடம் கதை பற்றி கூறப்போவதில்லை என்று தெரிவித்திருந்தேன். அடுத்த நாளே சந்தித்தேன். சினிமாவை தவிர்த்து நாங்கள் இருவரும் பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். இப்போதெல்லாம் கேஷுவலாக அவருடன் சந்திப்பு நடைபெறுகிறது என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்