- Advertisement -
Homeபொழுதுபோக்குமார்கழித் திங்கள் படக்குழு எடுத்த திடீர் முடிவு - சினிமாக்காரங்க, இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களா

மார்கழித் திங்கள் படக்குழு எடுத்த திடீர் முடிவு – சினிமாக்காரங்க, இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களா

- Advertisement -

நடிகர் மனோஜ், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன். 18 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வெற்றி பெற போராடிய அவர், ஒரு கட்டத்துக்கு பிறகு, தன் முடிவை மாற்றிக்கொண்டார். இப்போது தந்தை பாரதிராஜா வழியில் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், மார்கழித் திங்கள் என்ற படத்தை மனோஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தந்தை வழியில், மகனும் இயக்குநர் பாதையில் பயணிக்க துவங்கி இருப்பதால், புலிக்கு பிறந்தது பூனையாகாது என மனோஜ் நிரூபிப்பார் என, தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், கலைத்துறையினருக்கு வழிகாட்டும் ஒரு சிறந்த செயலை, மார்கழித் திங்கள் படக்ககுழு திடீரென முடிவு செய்து, அதை செயல்படுத்தியும் இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பலரும், மார்கழித் திங்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். இந்த தகவலும் வைரலாகி வருகிறது.

அதாவது, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என அதில் தெரிவித்திருந்தார். அதனால், உடல் உறுப்பு தானம் செய்து, பலரது உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து ஆலோசித்த மார்கழித் திங்கள் படக்குழு சார்ந்த 17 பேர், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், இயக்குநர் மனோஜ் உள்பட படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 17 பேர், உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து, அதற்கான உறுதிமொழியை அளித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் உடல்தானம் செய்ய , உறுதிமொழி அளித்திருக்கிறார். நடிகை ரேவதி உடல் தானம் செய்ய முன்வந்து இருக்கிறார். அதுபோல் பலரும் உடல் தானம், உறுப்பு தானம் செய்ய முன்வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வரிசையில், மார்கழித் திங்கள் படக்குழுவும் இந்த சிறந்த முடிவை எடுத்திருப்பது, சினிமாக்கராங்களாக இருந்தும், மக்கள் நலனில் அக்கறையுள்ள இந்த செயலில் இறங்கியது பலரது கவனத்தை, பாராட்டை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்