ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்துள்ளார். வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார்.
நடிகர் பிரசாந்த், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். விஜய் நாயகனாக வைத்து போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவாவும் இந்த படத்தில் நடித்துள்ளார். வசீகரா படத்துக்கு பிறகு, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக, கடந்த 17ம் தேதி மாலை படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 44 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளிவந்துள்ளன. விசில் போடு, சின்ன சின்ன கண்கள், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என 3 பாடல்களுமே யுவன் சங்கர் இசையை கொண்டாடும் விதமாக இல்லை. வழக்கமான விஜய் பாடல்களில் இருக்கும் துள்ளலோ, சுறுசுறுப்போ பாடல்களில் இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
இதுவரை திரிஷா எந்த படத்திலுமே தனியாக குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டதில்லை. ஆனால் இந்த படத்தில் நடிகை திரிஷா, விஜயுடன் ஒரு அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் தி கோட் படத்துக்கு இந்த பாடல் பெரிய பலமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இப்போது தி கோட் படத்தின் இசை வெளியீட்டு இல்லை என்பது முடிவாகி விட்டது. ஏனெனில் ஏற்கனவே பாடல்கள் வெளியான நிலையில் இன்னும் 2 பாடல்கள் மீதமுள்ளதால், இசை வெளியீடு இல்லாமல், நேரடியாக படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இப்போது விஜய், திரிஷா குத்தாட்டம் போட பாடலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.





