நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் வெளியான எந்த ஒரு படமும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடந்தாண்டில் வெளியான கங்குவா மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
சிங்கம் 2 படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 3 எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி காப்பான் 24 என்ஜிகே பசங்க 2 அஞ்சான் தானா சேர்ந்த கூட்டம் என எந்த படமுமே நடிகர் சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை. கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியான ரெட்ரோ படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும், வணிகரீதியாக திருப்தியளித்த படமாக உள்ளது.
இதையடுத்து நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த முக்கிய தகவல் வருகிற 23ம் தேதி சூர்யா பிறந்த நாளில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளனர். இந்த படம் நிச்சயம் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் சந்தோஷம் காத்திருக்கிறது. அதாவது நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் என்ற கல்வி அறக்கட்டளையை துவங்கி 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த அமைப்பின் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரை படிக்க செய்துள்ளனர்.
அதனால் அகரம் பவுண்டேசன் 15ம் ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட நடிகர் சூர்யா ஏற்பாடுகளை செய்து வருகிறார். விஜய் டிவியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் முக்கிய விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் அமீர்கான் ஆகியோரும் பங்கேற்று பேச உள்ளனர்.
சென்னையில் உள்ள சாய்ராம் கல்லுாரியில் வரும் 3ம் தேதி அகரம் பவுண்டேசன் 15ம் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. இதில் அகரம் பவுண்டேசன் மூலம் படித்து பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் இதில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். நிச்சயமாக இந்த விழாவில் நடிகர் சூர்யா தனது அடுத்தக்கட்ட பயணங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





