- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி நேர திக் திக் கார் பந்தயம்... துபாயில் இந்திய கொடியை பறக்க விட்ட அஜித்குமார்......

கடைசி நேர திக் திக் கார் பந்தயம்… துபாயில் இந்திய கொடியை பறக்க விட்ட அஜித்குமார்… இது தான்யா எங்களுக்கு தல பொங்கல் என மார்தட்டும் ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் அஜித்குமார் இந்திய சினிமா அளவில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்து பிரபலமான நட்சத்திரமாக விளங்குகிறார். அவரது திரைப்படங்களுக்கு என இங்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. தற்போது ரிலீசுக்கு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் தயாராக உள்ளன.

 

- Advertisement -

இதில் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே போல் விடாமுயற்சி திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நடிப்பை தாண்டி பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர் அஜித்குமார். ஆரம்ப காலகட்டத்தில் மெக்கானிக்காக இருந்தவர் பைக் மற்றும் கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.

 

- Advertisement -

இதேபோல அண்மை காலமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் அஜித் குமார் ஈடுபட்டார். ட்ரோன் தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தனக்கு பிடித்த விஷயங்களை 100 சதவீத ஈடுபாட்டுடன் அஜித்குமார் செய்வதால் அவர் மற்றவர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறார்.

 

கடந்த ஆண்டு முழுவதும் பைக் ரேசில் தீவிரம் காட்டி வந்த அஜித் குமார், இந்த ஆண்டு கார்பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேசிங் என்னும் அணியை அவர் உருவாக்கினார். இதில் அவருடன் சேர்த்து நான்கு பேர் இடம்பெற்றனர். துபாயில் நடைபெறும் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வந்தார் அஜித்குமார். இதற்கான பயிற்சியில் ஈடுபடும் போது அவரது கார் விபத்தில் சிக்கியது.

 

இதன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியூட்டின. இதனைத் தொடர்ந்து துபாய் கார் பந்தயத்தின் ஒரு பிரிவில் மட்டும் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 24H சீரிஸ் கார் ரேஸிங்கில் 911 GT3 R என்ற பிரிவில், அவரது அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

அஜித் குமார் ரேசிங் அணி வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நடிகர், வெளியே தேசிய கொடியுடன் வந்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தினர். துபாய் ரேஸில் ஒட்டுமொத்தமாக அவரது அணி 23 வது இடத்தை பிடித்திருக்கிறது. கார்பந்தயம் தொடர்பான அஜித்தின் வீடியோவும், அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்