- Advertisement -
மக்கள் திலகம் எம்ஜிஆரை இன்று வரை அவரது ரசிகர்கள் தொண்டர்கள் புரட்சித் தலைவர் என்றே அழைத்து வருகின்றனர். அதே போல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் புரட்சித் தலைவி என்றுதான் அதிமுகவினர் அழைக்கின்றனர். இந்த நிலையில் இன்று நெல்லையில் துவங்கப்பட்ட நடிகை திரிஷாவின் அமைப்பு இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை என பெயர் வைக்கப்பட்டதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. அம்மா மட்டும்தான் புரட்சித் தலைவி. எதற்காக திரிஷாவுக்கு அந்த பட்டப்பெயர் என்று கேள்வி எழுப்பி, உடனடியாக இளைய புரட்சிதலைவி என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.





