- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதெல்லாம் எனக்கு செட் ஆகாது, ரஜினியுடன் 4 படங்களில் நடிக்க மறுத்த நடிகை - தலைவர்...

இதெல்லாம் எனக்கு செட் ஆகாது, ரஜினியுடன் 4 படங்களில் நடிக்க மறுத்த நடிகை – தலைவர் கூட நடிக்கவே இவ்வளவு இமேஜ் பார்த்தவர் இவரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் 45 ஆண்டுகால சூப்பர் ஸ்டார். 72 வயதிலும் ஹீரோவாக அசத்திக்கொண்டு இருக்கிறார். ஜெயிலர் வெற்றிப்படத்தை தொடர்ந்து, இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில், தனது 170 வது படத்தில் ரஜினி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து விக்ரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இதன்படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க உளளது. லியோ படம் போல இல்லாமல், இந்த படத்தை வேற லெவலில் கொண்டு செல்ல, லோகேஷ் திரைக்கதை (ஸ்கிரிப்ட்) எழுதிக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள், குறிப்பாக நடிகைகளும் சொல்லிக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரு நடிகை அவருடன் 4 படங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்ததும், 5வது படத்தில் ரஜினி அவரை கண்டிப்பாக இதை மறுக்க கூடாது என தெரிவித்ததால், அந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்த தகவலும் இப்போது வெளிவந்துள்ளது.

படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க அந்த நடிகையை அழைத்த போது, இதுபோன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கிறார். சவுந்தர்யாவின் ஷாப்ட் கேரக்டரும் எனக்கு செட் ஆகாது என கூறியிருக்கிறார்.பாபா படத்தில் நடிக்க சொன்ன போது, மனிஷா கொய்ராலா நடித்த சாமுண்டீஸ்வரி கேரக்டர், பணத்துக்காக காதலை வெறுப்பதாக இருப்பதால் அதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

அடுத்து சந்திரமுகி படத்தில், நயன்தாரா நடித்த துர்கா கேரக்டரிலும் பெரிய ஸ்கோப் நடிப்பதற்கு இல்லை என அந்த நடிகை மறுத்துவிட்டார். கடைசியில் சிவாஜி படத்தில் ஸ்ரேயா கேரக்டரில் நடிக்க ரஜினி அழைத்துள்ளார். இந்த கேரக்டர் நன்றாக இருந்தாலும் இப்போது,வேறொரு ஆங்கில படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அதனால் நடிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் புறக்கணித்துள்ளார்.

இப்படி படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி என நான்கு படங்களை அவர் நிராகரித்த நிலையில், 5வதாக ரஜினி போராடி ஒத்துக்கொள்ள செய்த படம்தான் எந்திரன். 4 படங்களை நிராகரித்த நிலையில், எந்திரன் படத்தில் நடிக்க சம்மதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். எந்திரன் படத்தின் இயக்குநர் ஷங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை, நீண்டநாள் கனவும், இந்த படத்தின் மூலம் ரஜினிக்கு நிறைவேறியது.

- Advertisement -

சற்று முன்