மலையாள சினிமாவில் இருந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவில் மூலம் அறிமுகமானவர். இப்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சாய்பல்லவி நடித்த கார்கி படத்தில், சாய்பல்லவி நடித்த முதன்மையான நாயகி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
அந்த படத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் தொல்லை செய்யப்படுவார். அதில் சாய்பல்லவியின் தந்தையும் ஒரு குற்றவாளி என சேர்க்கப்பட்டிருப்பார். அவர் ஒரு அபார்ட்மென்டில் செக்யூரிட்டியாக உள்ள நிலையில் அங்கு நடந்த அந்த சம்பவத்தில் அவரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பார்.
ஆனால் தனது வயதான தந்தை அப்படிப்பட்ட மனிதர் இல்லை என்று மகள் சாய்பல்லவி தனது தந்தைக்காக போராடுவார். கடைசி வரை நடந்த சம்பவம் என்னவென்று கண்டறிய அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு தனது தந்தையை அந்த வழக்கில் இருந்து விடுவிப்பார்.
ஆனால் கடைசியில் தனது தந்தையும் குற்றவாளிதான் என தெரிய வரும்போது நாயகி எடுக்கும் அதிரடி முடிவுதான் பெரிய டிவிஸ்ட் ஆக அமையும். இதில் சாய்பல்லவியின் தந்தையாக நடிகர் ஆர்எஸ் சிவாஜி நடித்திருந்தார். மேலும் வக்கீல் கேரக்டரில் நடிகர் காளி வெங்கட் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சாய்பல்லவிக்கு சிறந்த ஒரு படமாக அமைந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, கார்கி படத்தில் நடிக்க மறுத்தது குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, முதலில் கார்கி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் அந்த கதையை கேட்ட பிறகு அந்த சமயத்தில் என்னை விட பெரிய நடிகை ஒருவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும். அதுதான் அந்த இயக்குனருக்கும் நல்லது என நினைத்து வேண்டாம் என்றேன்.
ஒருவேளை இப்போது நான் இருக்கும் நிலையில் கார்கி படத்தில் நாயகி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தால் நான் நிச்சயமாக அந்த படத்தில் நடித்திருப்பேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருக்கிறார். மேலும் கார்கி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





