- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டியவர் ஐஸ்வர்யா ராய்தான், ஆனால் கடைசி நேரத்தில்….? ...

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டியவர் ஐஸ்வர்யா ராய்தான், ஆனால் கடைசி நேரத்தில்….? – டைரக்டர் ஷங்கர் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் இருந்தாலும் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறவர். உலக நாயகன் என்று புகழப்படும் அளவுக்கு நடிப்பில், தன்னிகரில்லாத ஒரு கலைஞராக பல சாதனைகளை செய்தவர். இப்போதும் செய்துக்கொண்டு இருப்பவர். இந்தியன் 2 படம் திரைக்கதை மோசமாக இருந்தாலும், கமல் நடிப்பை ரசிகர்கள் யாரும் இதுவரை குறை சொல்லவில்லை.

கதை, திரைக்கதை, இசை என பல விஷயங்கள் மிக மோசமாக, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தாலும், இந்தியன் 2 படத்தில் கமல் நடிப்பு அவரது கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாகவே இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் லாஜிக் இல்லாத கதை, கதையே இல்லாத பிரமாண்டம் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் கமலின் அசுரத்தனமான நடிப்பும், உழைப்பும், அதற்காக அவர் காட்டிய மெனக்கெடலும் வீணாகிப் போய்விட்டது என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

குறிப்பாக கதை, திரைக்கதையில் இயக்குனர் ஷங்கர் காட்டாத அக்கறை, இசையில், பாடல்களில் போதிய ஆர்வம் காட்டாத அனிருத் படத்தின் இமாலய தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஏனெனில் ஜெயிலர் படத்தை தூக்கிப் பிடித்த அனிருத் மேஜிக் இசை, இந்தியன் 2 படத்தில் படுத்து விட்டது. ஷங்கர் ரிலீஸ் செய்வதற்கு முன் இந்தியன் 2 படத்தை பார்த்தாரா, இல்லையா என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் டைரக்டர் ஷங்கர், எத்தனை சூப்பர் ஹிட் படங்களை தந்திருக்கிறார்? அவருக்கு இந்தியன் 2 படத்தை எடுக்கும் போது இந்த படத்தை ரசிகர்கள் ஏற்பார்களா, ரசிப்பார்களா என்பது தெரிய வேண்டாமா, புதுமுக இயக்குனர் கூட இப்படி ஒரு படத்தை இயக்க மாட்டாரே, என்றுதான் ஷங்கர் அபிமானிகளாக உள்ள ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், இந்தியன் 2 பிரமோ நிகழ்ச்சியில் 2 தினங்களுக்கு முன் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர், பல ஆண்டுகளாக வெளிவராத ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது 1996ம் ஆண்டில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட இந்தியன் படம் குறித்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த கமலுக்கு நடிகை சுகன்யாவும், மகன் கேரக்டரில் நடித்த கமலுக்கு நடிகை மனிஷா கொய்ராலாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இதுபற்றி கூறிய டைரக்டர் ஷங்கர், இந்தியன் படத்தில் மகன் சந்துரு கேரக்டரில் நடித்த கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை தான் முதலில் நடிக்க வைக்க முடிவு செய்தோம். ஆனால் அவரை அணுகி கால்ஷீட் கேட்ட போது, அவர் இந்தி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால் அப்போது அவர் தேதி கிடைக்கவில்லை. அதன்பிறகுதான், மனிஷா கொய்ராலா அந்த கேரக்டரில் நடித்தார் என்று ஷங்கர் கூறியிருக்கிறார். இதுவரை உலக அழகி ஐஸ்வர்யா ராய், உலக நாயகன் கமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்