- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் 63, 64 ஆவது திரைப்படங்களை இயக்குபவர்கள் இவர்கள்தான்? மறுபடியும் இவங்க கூடவா? விடாமுயற்சியே இன்னும்...

அஜித்தின் 63, 64 ஆவது திரைப்படங்களை இயக்குபவர்கள் இவர்கள்தான்? மறுபடியும் இவங்க கூடவா? விடாமுயற்சியே இன்னும் முடியல, அதுக்குள்ள…

- Advertisement -

அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக  இருக்கிறது. ரசிகர்கள் பலரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொது தொடங்கும் என்ற ஆவலில் இருக்கின்றனர். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில்  மூழ்கியிருக்கின்றனர். அது மட்டுமல்லாது அஜித் திடீர் தீடீரென்று பைக் எடுத்துக்கொண்டு வெளிநாடு கிளம்பிவிடுகிறார். ஆதலால் ரசிகர்கள் பலரும் கவலையோடு இருக்கின்றனர்.

இவ்வாறு “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், தற்போது அஜித்தின் 63 மற்றும் 64 ஆவது திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அஜித்தின் 63 ஆவது திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணுவர்தன் இதற்கு முன் அஜித்தை வைத்து “பில்லா” என்ற ஸ்டைலிஷான திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து “ஆரம்பம்”  என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விஷ்ணுவர்தன் 63 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவருகிறது.

அதே போல் அஜித்தின் 64 ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இதற்கு முன்  அஜித்தை வைத்து, “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்”, “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவா, அஜித்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 62 ஆவது திரைப்படமான “விடாமுயற்சி” திரைப்படமே இன்னும் தொடங்கப்படாத நிலையில் அஜித்தின் 63 மற்றும் 64 ஆவது திரைப்படங்களை குறித்த தகவல் வெளிவந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்