- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தால் அதை தொடவே முடியாது, முட்டாள் பசங்கதான் இப்படி பண்ணுவாங்க- எரிமலையாய் பொங்கிய கமல் பட...

அஜித்தால் அதை தொடவே முடியாது, முட்டாள் பசங்கதான் இப்படி பண்ணுவாங்க- எரிமலையாய் பொங்கிய கமல் பட தயாரிப்பாளர்

- Advertisement -

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமீப நாட்களாக சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது. விஜய் VS அஜித் என்ற நிலை மாறி விஜய் VS ரஜினி என்ற நிலை வந்துள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். இதில் அஜித் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும் சில பேச்சுக்கள் அடிபடுகின்றது.

விஜய்க்கும் ரஜினிக்கும்தான் போட்டி என்றும் அஜித் தனது வேலை உண்டு தான் உண்டு என்று இருக்கிறார் என பலர் கூறுகின்றனர். இது அஜித் ரசிகர்களுக்கே சற்று கலக்கத்தை உண்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் “வேட்டையாடு விளையாடு” போன்ற  பல திரைப்படங்களை தயாரித்த மாணிக்கம் நாராயணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “அஜித்குமார் ஏன் சூப்பர் ஸ்டார் என்ற ஒப்பீட்டிற்குள் வரவில்லை?’ என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மாணிக்கம் நாராயணன், “தன்னால் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது என்று அஜித்திற்கே தெரியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் ரஜினி, விஜய் ஆகியோரின் ரேஞ்சே வேறு. அந்த லெவலை அஜித்தால் தொடவே முடியாது. அவருடைய உடல், அவருடைய பிம்பம் ஆகியவைகளை கொண்டு இவர்களின் நிலையை எட்ட முடியாது. அவர் அதனை முயற்சி செய்யவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், “அஜித் தான் அரசியலுக்கு வரமாட்டேன் என கூறிவிட்டார். ரசிகர் மன்றத்தையும் அவரே கலைத்துவிட்டார். இவர்கள் முட்டாள்கள், அவரது பின்னால் அலைகிறார்கள். அவரவர்களின் வேலைகளை பாருங்கள் என்று அஜித் என்றோ கூறிவிட்டார். மற்ற காரியங்களில் அஜித் எப்படியோ, ஆனால் இதனை அவர் தெளிவாக கூறிவிட்டார்.

‘என் பின்னால் அலையாதீர்கள். நான் பாட்டுக்கு நடித்துவிட்டு போய்விடுவேன். உங்கள் அப்பா அம்மாவையும் உங்கள் வேலைகளையும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அஜித் கூறிவிட்டார். ஆதலால் அஜித் இந்த விளையாட்டிற்குள் வரவில்லை. அவர் தனியாக ஒரு பக்கம் நடித்துவிட்டு அவரது வேலைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறார்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்