- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் ரிலீசாகும் தல படம்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள்...

விரைவில் ரிலீசாகும் தல படம்… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் அஜித்குமார். அவருக்கு அமராவதி திரைப்படம் தமிழில் முதல் திரைப்படமாக அமைந்தது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், அன்றைய தேதியில் பெரிதாக பேசப்படவில்லை. பிறகு பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களை நடித்த அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது ஆசை திரைப்படம்.

அந்தப் படத்துக்கு பிரகாஷ்ராஜ் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், இந்த பக்கம் காதல் நாயகனாக நம்மை கவர்ந்தார் அஜித். இதன் பிறகு வெளியான காதல் கோட்டை திரைப்படம், அஜித்தின் திரை உலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கதாநாயகனும் கதாநாயகியும் பார்க்காமலே காதல் கொள்ளும் வித்தியாசமான கதைகளத்துடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அன்றைய தேதியில் தேசிய விருதைப் பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து காதல் மன்னன் அமர்க்களம் என அஜித்தின் திரை உலக பயணம் ஏறுமுகத்தில் செல்ல, அவரை டாப் கியரில் கொண்டு போய் நிறுத்தியது தீனா திரைப்படம். வாலி திரைப்படத்தின் சூட்டிங் இன் போது, இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவியாளராக செயல்பட்டார் ஏ.ஆர். முருகதாஸ். அந்த சமயத்தில் தீனா படத்தின் கதையை அஜித்திடம் சொல்லி, ஓகே வாங்கினார் முருகதாஸ்.

இதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது தீனா திரைப்படம். காதில் கடுக்கன், கையில் காப்பு, வாயில் தீக்குச்சி என மிக்க ஸ்டைலான கெட்டப்பில் வந்தார் அஜித். ஆக்சன் கதை களத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அன்றைய தேதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் அஜித்தை, ரசிகர்கள் தல என்று அழைக்கும் வழக்கமும் அந்த திரைப்படத்தின் மூலம் வந்தது.

- Advertisement -

இந்தப் படத்தை தொடர்ந்து இன்று வரை அஜித் ரசிகர்கள் தல என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இப்படி அழைக்க வேண்டாம் என்று அஜித் கூறினார். தன்னை இப்படி அழைப்பதில் உடன்பாடு இல்லை என்றும், அதற்கு பதில் ஏ கே என்று வேண்டுமானால் கூறுங்கள் என்றும் அவர் யோசனை வழங்கியிருந்தார். ஆனால் அது எல்லாம் அரசியல் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை அவரை தல என்றே அழைக்கின்றனர்.

இந்த சூழலில், அஜித்தின் திரை உலக பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்த தீனா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக திரையரங்குகளில், ஒரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. அதில் வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக, தீனா திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்