இயக்குனர் சங்கருக்கு தற்போது இது போதாத காலம் தான் என்று கூறவேண்டும். ஒரு காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் சங்கர். தனது ஒவ்வொரு திரைப்படத்தையும் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கும் சங்கர் அதற்கான லாபத்தையும் இரண்டு மடங்கு பார்த்து விடுவார்.
ஜென்டில்மேனில் தொடங்கிய அவரது பயணம் இந்தியன் காதலன் ஜீன்ஸ் என தொடர்ந்து ஏறு முகத்திலேயே சென்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, சிவாஜி எந்திரன் 2.0 உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களையும் அவர் கொடுத்திருந்தார். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு சங்கர் உயர்ந்தார்.
ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளிவந்த எந்த திரைப்படங்களுமே அந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விக்ரம் நடிப்பில் அவர் எடுத்த ஐ திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில், விமர்சன ரீதியாக அதனை நிரப்புவதை தவறவிட்டது.
பிறகு கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்தார் சங்கர். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இணையத்தில் கேலி கிண்டலுக்கும் ஆளானது. முதல் பாகத்தை கம்பேர் செய்து இதெல்லாம் ஒரு படமா என்கிற அளவுக்கு ரசிகர்கள் எல்லை மீறி கலாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து தெலுங்கில் நேரடி திரைப்படம் ஆக கேம் சேஞ்சர் படத்தை சங்கர் இயக்கினார். இதுவும் விமர்சன ரீதியாக அந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கலாம் என்று பேசுகிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் என்பது இதுவரை வெளியாகவில்லை.
இப்படியான சூழலில் அண்மையில் அவர் அஜித்திற்கு ஒரு மெசேஜ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உங்களை சந்திக்க வேண்டும் என்று சங்கர் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அஜித் தற்போது வரை அதற்கு ரிப்ளை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கார் ரேஸில் மிகுந்த தீவிர கவனம் செலுத்தி வருவதால் அஜித் பதில் கூறாமல் இருந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இல்லை அவர் உடன் படத்தில் இணைவதை தவிர்க்க நடிகர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





