- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படம் டைட்டிலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை சொன்னாரா இயக்குனர் வெங்கட்பிரபு? -...

குட் பேட் அக்லி படம் டைட்டிலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை சொன்னாரா இயக்குனர் வெங்கட்பிரபு? – கோபத்தில் ஏகே ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை டைரக்ட் செய்து வருகிறார் வெங்கட்பிரபு. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள கிரீன் பீல்டு இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இடையிடையே கேரள ரசிகர்களை விஜய் சந்திக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சில தினங்களாக வைரலாகி வருகின்றன.

டைரக்டர் வெங்கட்பிரபு துவக்கத்தில் சில படங்களில் நடித்தார். உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி போன்ற படங்களில் நடித்த அவர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு என தொடர்ந்து பல படங்களை இயக்கி உள்ளார். முக்கிய வேடங்களில் படங்களில் வெங்கட்பிரபு நடித்தும் வருகிறார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரை ஹீரோவாக வைத்து எடுத்த படம் மங்காத்தா. டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த படத்துக்கு பிறகு வெங்கட்பிரபுவை, தனது படத்தை இயக்க அஜீத்குமார் அழைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், மங்காத்தா படத்தில் அஜீத்குமாரை காட்டிலும் அர்ஜூனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. படம் வெளியான பிறகு, இதையறிந்த அஜீத்குமார் பயங்கர கடுப்பானார்.

மேலும் வெங்கட்பிரபுவும், அஜீத்குமாரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என அஜீத்குமார் கேட்டுக்கொண்ட நிலையில், அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தவுடன் உடனடியாக அதை சமூக வலைதளங்களில் அவர் பரவ விட்டதாலும் அஜீத்குமார் டென்சன் ஆனார். அதனால் நேர்கொண்ட பார்வை படத்தை வெங்கட்பிரபு இயக்க முதல் சாய்ஸ் ஆக இருந்த நிலையில் அவர் வேண்டாம் என மறுத்ததும் அஜீத்குமார்தான்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வெங்கட்பிரபு பலமுறை போன் செய்தும், மெசேஜ் செய்தும் அஜீத்குமார் அவருக்கு எந்தவிதமான ரெஸ்பான்சும் தராமல் புறக்கணித்தார். இதெல்லாம் வெங்கட்பிரபுவுக்கு பயங்கர வெறுப்பேற்றிய நிலையில், விஜய் படத்தை மிகச் சிறப்பான படமாக கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு அஜீத்குமாரே அழைத்து பாராட்டி, அவரது படத்தை இயக்க தானாக முன்வந்து வாய்ப்பு தர வேண்டும் என, வெங்கட்பிரபு வெறித்தனமாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜீத்குமார் படத்துக்கு குட் பேட் அக்லி என்பதற்கு வெங்கட்பிரபு புது விளக்கம் தந்துள்ளார். அதன்படி குட் என்றால் விஜய், பேட் என்றால் அஜீத்குமார், அக்லி என்றால் பிரேம்ஜி என்று கூறியுள்ளார். அதாவது அந்த படத்தை நான் இயக்கினால் விஜய் குட் ஹீரோவாகவும், அஜீத்குமார் பேட் வில்லனாகவும் நடிக்க வைத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார். விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஏகே வில்லனா, என அஜீத்குமார் ரசிகர்கள் வெங்கட்பிரபு மீது பயங்கர கோபத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்