- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தின் பணிகளை தொடங்கிய அஜித், இயக்குனருடன் வெளிநாட்டுக்கு பயணம்! செம பிளான் போடும் படக்குழு!...

விடாமுயற்சி படத்தின் பணிகளை தொடங்கிய அஜித், இயக்குனருடன் வெளிநாட்டுக்கு பயணம்! செம பிளான் போடும் படக்குழு! என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

அஜித்குமார் தனது 62 ஆவது திரைப்படத்தில் மகிழ் திருமேனியுடன் கைக்கோர்க்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி, அதாவது அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு “விடாமுயற்சி” திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன் பின் இத்திரைப்படத்தின் அப்டேட் வெளிவரும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனிடையே அஜித்குமார் தனது பரஸ்பர மரியாதை பயணத்தின் இரண்டாம் கட்டத்தை நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை சுற்றி முடித்துவிட்டு நேபாள், பூடான் ஆகிய நாடுகளையும் சுற்றிவிட்டு அஜித்குமார் சென்னை திரும்பினார். இதனை தொடர்ந்து தனது உலக பைக் சுற்றுலாவின் இரண்டாம் கட்ட பயணத்தை நவம்பர் மாதம் தொடங்கவுள்ளார்.

- Advertisement -

மேலும் அஜித்குமார் “ஏகே மோட்டோ ரைடு” என்ற பெயரில் ஒரு பைக் சுற்றுலா நிறுவனத்தையும் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இவ்வாறு அஜித்தின் பைக் சுற்றுலா குறித்த அறிவிப்புகள் வெளிவந்ததே தவிர “விடாமுயற்சி” குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆதலால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்தனர். சிலர் “விடாமுயற்சி” திரைப்படம் டிராப் ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூட கூறி வந்தார்கள். இந்த நிலையில் இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதற்கட்ட பணியை தொடங்கும் வகையில் அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் வெளிநாடு சென்றுள்ளார்களாம். அங்கே இத்திரைப்படம் சம்பந்தமாக ஃபோட்டோஷூட்டுகள் எடுக்கப்பட உள்ளதாம்.

- Advertisement -

அதே போல் “விடாமுயற்சி” திரைப்படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்