நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி அல்லது மே 1ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் பத்மபூஷன் விருதுகள் கடந்த மாதம் ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜீத்குமார், நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக ஆளுனர் ஆர் என் ரவி சார்பில், பத்மபூஷன் விருது பெறுபவர்களுக்கு இன்று கவர்னர் மாளிகையில் பராாட்டு விழா நடத்தப்படுகிறது. இது பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் சார்பில் செய்யப்படும் ஒரு மரியாதை நிமித்தமான விருந்தினரை பாராட்டி கௌரவிக்கும் ஒரு முக்கிய உபசரிப்பாகும்.
ஆனால் இந்த பாராட்டு விழாவில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொள்ள மாட்டார் என, அஜீத்குமாரின் மேலளார் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் அஜீத்குமார் தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துக்கொண்டு வருவதால், இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே வேளையில் அஜீத்குமார் சென்னையில் இருந்திருந்தாலும் ஆளுநர் ஆர்என் ரவி நடத்தும் இந்த பாராட்டு விழாவில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் நடிகர் அஜீத்குமாருக்கும் திமுகவுக்கும் இடையில் நல்ல உறவுமுறை ஏற்பட்டுள்ளது. அஜீத்குமார் உதயநிதி இடையே நட்பு பலப்பட்டுள்ளது. அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்க அஜீத்குமாருக்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் தர உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 20206ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுவதால், அஜீத்குமாரை தங்களது ஆதரவாளராக காட்ட திமுக தலைமை அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் திமுகவுக்கும் கடும் மோதல் நிலவி வரும் நிலையில் அஜீத்குமார், ஆளுநரின் பாராட்டு விழாவில் பங்கேற்கவே வாய்ப்பில்லை என்று தகவல் பரவி வருகிறது.





