- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணையும் படத்தில் இப்படி ஒரு விஷயமா? 25 ஆண்டுகளுக்கு பின்னால் சென்ற இயக்குனர்...

ரஜினி கமல் இணையும் படத்தில் இப்படி ஒரு விஷயமா? 25 ஆண்டுகளுக்கு பின்னால் சென்ற இயக்குனர் நெல்சன் – இது வேற லெவல் சம்பவம் லே!

- Advertisement -

அறிவியல் வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பம் என்பது சகல துறைகளிலும் இப்போது மிகப்பெரிய வளர்ச்சி பெற்று முன்னணியில் இருந்து வருகிறது இது சினிமாத்துறையிலும் பல மாற்றங்களை முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்றைய சினிமா சிஜி விஎஃப் எக்ஸ் கிரீன் மேட் என பலவிதமான நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக கடந்த 2010ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு முழுமையாக மாறிவிட்டது. அதனால் அதுவரை பிலிம் ரோல் மூலம் படங்கள் எடுக்கப்பட்ட வந்த நிலையில், 2010ம் ஆண்டுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு திரைப்படங்களாக உருவாகின்றன. பிலிம் ரோல் பயன்பாடு என்பது தமிழ் சினிமாவில் 100 சதவீதம் மறைந்து போய்விட்டது.

- Advertisement -

ஆனால் என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் இருந்தாலும் பிலிம் ரோலில் எடுக்கப்படும் படங்களின் தரமும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காட்சிகள் மங்காமல் இருப்பதும் பிலிம் ரோலின் சிறப்பம்சமாகும். மேலும் பிலிம் ரோலில் படங்கள் எடுக்கப்படும் போது குறிப்பிட்ட அடி நீளம் என்பது இயக்குனர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பாக இருந்தது.

பல ஆயிரம் நீளத்துக்கு பல நாட்கள் படம் எடுக்காமல் குறிப்பிட்ட நீளத்துக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டிய ஒரு முக்கிய பொறுப்பும் இயக்குனர்களுக்கு இருந்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவும் வெகுவாக குறைந்தது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாதக்கணக்கில் எடுக்கப்படும் காட்சிகள் கடைசி நேரத்தில் அதில் நீக்கப்பட்டு விடுகின்றன.

- Advertisement -

ஆனால் பிலிம் ரோல் காலகட்டத்தில் அப்படி எல்லாம் பிலிம் ரோலை விரயம் செய்து படங்களை எடுக்கும் பழக்கம் இல்லை. அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருத்த நஷ்டத்தை தான் தயாரிப்பாளர்களுக்கு தந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படத்தில் பிலிம் ரோலை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மற்றும் இயக்குனர் நெல்சன் இருவரும் திட்டமிட்டு இந்த படத்தை பிலிம் ரோலில் உருவாக்கும் முடிவில் உள்ளனர். படத்தின் பிரமோ வீடியோவையே முதலில் பிலிம் ரோலில் தான் உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் நேரமின்மையால் டிஜிட்டலிலேயே அதை எடுத்தனர். இப்போது படத்தை முழுவதுமாக பிலிம் ரோலில் எடுக்க உள்ளனர். ஆனால் பிலிம் ரோலை திரைப்படமாக்கும் ஸ்டுடியோ வசதி சென்னையில் இல்லை. மும்பையில் உள்ளது. ஹாலிவுட் படங்களை தரும் வெளிநாட்டில் உள்ள ஸ்டுடியோக்களில் தான் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்