- Advertisement -
மிகவும் பிரபலமான தமிழக வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் திரைவடிவில் கொண்டு வந்தார். பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களில் நடிகர்கள் கார்த்தி ரவிமோகன் சியான் விக்ரம் சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் அஜீத் குமாரை மனதில் வைத்துதான் வந்தியத்தேவன் கேரக்டர் எழுதப்பட்டது என்று தயாரிப்பாளர் ராம் வாசு கூறியிருக்கிறார்.





