தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் அஜீத்குமார். கடந்தாண்டில் அவர் நடித்த விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்கள் வெளியான நிலையில் ஓராண்டு ஆகியும் ஏகே படம் எதுவும் வெளிவரவில்லை. கடந்தாண்டு முழுவதும் ஏகே 64 படப்பிடிப்பும் துவங்கவில்லை. இப்போதும் அதற்கான அறிகுறி இல்லை.
சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸில் பங்கேற்பதில் தான் அஜீத்குமார் அதிக ஆர்வமும் ஈடுபாடும் காட்டி வருகிறார். இது ஒருபுறம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் காத்திருப்பதை பொருட்படுத்தாமல் கார் ரேஸில் அவரது முழு கவனமும் இருக்கிறது.
கடந்தாண்டு முழுவதும் கார் ரேஸ்க்காக ஒதுக்கிய அவர் இப்போதும் துபாயில் 2 மாதங்களாக கார் ரேஸில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். அத்துடன் அவர் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது ரசிகர்களுடன் ஒரு ரவுண்டுக்கு 1.5 நிமிடம் வீதம் 3 நிமிடங்கள் தனது காரில் 2 ரவுண்டு சென்று வருகிறார்.
இதில் ஒரு ரசிகருக்கு 3500 திராம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. சுமார் 40 ரசிகர்கள் வரை இதுவரை அஜீத்குமாருடன் இப்படி காரில் சிறப்பு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அஜீத்குமார் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இப்படி எல்லாம் ரசிகர்களிடம் பணம் கறக்க வேண்டுமா என்றும் பலர் வசைபாடினர். ஆனால் இந்த கட்டணத்தை கார் ரேஸ் நடத்தும் துபாய் ஆட்டோடிரம் என்கிற நிறுவனம் தான் வசூலிக்கிறது. இது அஜீத்குமாரின் தனிப்பட்ட வருமானம் அல்ல என்று தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு ஸ்பெஷல் ட்ரிப்புக்கு அஜீத்குமார் சம்மதிக்க காரணம், கார் ரேஸ் குறித்து இளம் வயதினர் மற்றும் தனது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். இப்படி ரேஸ் காரில் தன்னுடன் பயணிக்கும் போது அந்த புதுமையான அனுபவம் கார் ரேஸ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். கிரிக்கெட் விளையாட்டை போல கார் ரேஸ் குறித்தும் தனது ரசிகர்களிடம் விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்படுத்தும் முயற்சியாவே அஜீத்குமார் இப்படி ரசிகர்களுடன் ரவுண்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.





