- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கு பரியேறும் பெருமாள் பிடித்தது... கர்ணன் ஏன் பிடிக்கவில்லை... அவரே கேள்வி எழுப்பி அதற்கான காரணத்தையும்...

உங்களுக்கு பரியேறும் பெருமாள் பிடித்தது… கர்ணன் ஏன் பிடிக்கவில்லை… அவரே கேள்வி எழுப்பி அதற்கான காரணத்தையும் கூறிய பா ரஞ்சித்… வாயடைத்துப் போன ரசிகர்கள்…

- Advertisement -

கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், சாதிய கட்டமைப்பால் ஒரு இளைஞன் எந்த அளவு பாதிக்கப்படுகிறான் என்பதை கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ்.

 

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை இந்த திரைப்படம் உலுக்கியது. காட்சிக்கு காட்சி காண்போரின் மனதில் கேள்வியை தூண்டியது. படத்திற்கு பக்க பலமாக சந்தோஷ் நாராயணனின் இசையும் அமைந்தது. இப்படி அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்ததால், பரியேறும் பெருமாள் வெற்றிக்கொடி நாட்டியது.

 

- Advertisement -

இதன் பிறகு மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பேருந்து வசதி இல்லாத கிராம மக்களின் கதையையும், அதற்குப் பின்னால் சாதிய அரசியலையும் மாரி செல்வராஜ் தோலுரித்து காட்டி இருந்தார். படமும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. தனுஷிற்கு மற்றொரு வெற்றி திரைப்படமாக இது அமைந்தது.

 

இந்தப் படத்தை தொடர்ந்து மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். ஆனால் முந்தைய படங்களை போல் இல்லாமல் மிகவும் தொய்வான கதையாக இருந்தது மாமன்னன். குறிப்பாக இரண்டாம் பாதி வழக்கமான கதையைப் போல் நகர்ந்தாலும், திரைக்கதை மிகவும் சுமாராகவே இருந்ததால் படம் கலவையான விமர்சனத்தையே சந்தித்தது.

 

ஏ ஆர் ரகுமானின் இசையும், பகத் ஃபாசிலின் நடிப்புமே படத்திற்கு தூணாக அமைய, மாமன்னன் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படியான சூழலில் தான் வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். வரும் 23ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான ட்ரெயினரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 

இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உங்களுக்கு பரியேறும் பெருமாள் படத்தை பிடிக்கும். ஆனால் கர்ணன் திரைப்படத்தை பிடிக்காது. ஏனென்றால் கர்ணன் திருப்பி அடிக்கிறான். உங்களுக்கு மனதை வருடும் படி தான் கதை கூற வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் தான் இருக்க வேண்டும். ஆனால் மாரி அப்படி அல்ல, அவன் வசதிக்கு ஏற்றது போலத்தான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை எடுத்தான். இப்போது, வாழைப் படத்தையும் எடுத்துள்ளான் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்