தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இன்று இருக்கிறார் நடிகர் விஜய். அவரது படங்கள் வெளியாகும் நாள் தீபாவளி போல், தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. லியோ படம் வெளியீட்டின் போது தியேட்டர்களின் முன் ரசிகர்கள் மேளம் கொட்டி, பட்டாசு வெடித்து, தோரணங்கள் கட்டி, இனிப்புகள் வழங்கி, அந்த படத்தை வரவேற்று மகிழ்ந்தனர்.
நாளை அரசியலிலும் இதுபோன்ற ஒரு வரவேற்பும் மகிழ்ச்சியான நிலைப்பாடும் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான், அரசியல் களத்தில் இறங்குகிறார். ஆனால் அவரது வருகை நிச்சயமாக திமுக, அதிமுக கட்சிகளை சார்ந்த இரு தரப்பினருக்குமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜயை, தமிழக அரசியலில் இறங்கி விட்டால் தேர்தல் போட்டிகளில் போராடுவது, மக்கள் மத்தியில் ஓட்டுக்காக காசை வாரி இறைப்பது, இலவசங்களை அள்ளி வழங்குவது போன்ற திட்டங்களை அறிவிக்காமல், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தரமான இலவச கல்வி, இலவச மருத்துவம் தந்தாலே போதும். அதுவே மக்களை நம் பக்கமாக திருப்பி விடும் என்று கருதுகிறார்.
இந்த சூழலில், விஜய்க்கு சினிமாவில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் அஜீத்குமார்தான். அதனால் அஜீத்குமாரை எப்படியும் தமிழக அரசியலில் இறங்கி விட்டால், அவர்கள் இருவருக்கும் உள்ள போட்டியில், ரசிகர்கள் மோதலில் இருவருமே அரசியலில் ஜெயிக்க மாட்டார்கள். வழக்கம்போல நாம் வந்துவிடலாம் என்று அதிமுக, திமுக கட்சிகள் நினைக்கின்றன.
இதற்காக முக்கிய ஊடகவியலாளர் ஒருவர், அஜீத்குமாரை அடிக்கடி சந்தித்து பேசி அவரை பிரைன்வாஷ் செய்து வருவதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. நேர்பட பேசு என்ற படத்தில் நடித்த அந்த பிரபல ஊடகவியலாளர், அன்று முதல் தொடர்ந்து அஜீத்குமாருடன் தொடர்பில் இருப்பதாகவும், இன்று வரை அவர், அஜீத்குமாரை அரசியலுக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அஜீத்குமார் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவிலேயே இருக்க மாட்டார். துபாயில் போய் செட்டிலாக போகிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. ரசிகர் கூட்டத்தை பார்க்கவே அலர்ஜி என்கிறார். விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர், மூத்த நடிகர் மறைவுக்கே நேரில் வரவில்லை. இவர் விஜய்க்கு எதிராக அரசியலுக்கு வருவாா் என்றால், அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த காமெடி என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





