- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்... அஜர்பைஜானில் நடந்த சம்பவத்தின் காட்சி வெளியானது...

பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அஜித்… அஜர்பைஜானில் நடந்த சம்பவத்தின் காட்சி வெளியானது…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தடையற தாக்க தடம் உள்ளிட்ட கிரைம் திரில்லர் படங்களை எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே இந்த படத்தை எடுக்க பட குழு திட்டமிட்டுள்ளதாம். அதிலும் 70% பட சூட்டிங் அஜர்பைஜான் நாட்டிலேயே நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் சூட்டிங் தொடங்கி சில நாட்களிலேயே கலை இயக்குனர் மிலன், உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, சூட்டிங் சிறிது காலம் ஒத்திவைத்து பின்னர் தொடங்கியது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவாளராக செயல்பட்ட நீரவ் ஷாவும், திடீரென இந்தியா திரும்பினார். இதனால் ஓம் பிரகாஷ் என்பவரை ஒளிப்பதிவாளராக படக்குழு நியமித்தது. இதுவும் அஜித் ஏற்பாட்டில் தான் நடந்ததாக கூறப்படுகிறது. ஓம் பிரகாஷ் ஏற்கனவே ஆரம்பம் திரைப்படத்தில் பணிபுரிந்து இருந்தார்.

அது ஞாபகம் வைத்த அஜித் இது தொடர்பாக இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் கூறியிருக்கிறார். வேறொரு படப்பிடிப்பில் இருந்த விஷ்ணுவர்தனும், தன்னுடைய படத்தில் பணிபுரிந்த ஓம் பிரகாஷை அனுப்பி இருக்கிறார். இதை தொடர்ந்து சூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இது போக அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா ஆகியோரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்துடன் அர்ஜுன் மற்றும் ஆரவ் இருவரும் ஹோட்டலில் உணவருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதேபோல் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படமும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில், நடிகை பாவனாவை அஜித் சந்தித்துள்ளார். பாவனா பிங்க் நோட் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ளார். அப்போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அவரை காண்பதற்கு தாமதமாக வந்த அஜித், நடிகை இடம் மன்னிப்பு கேட்டார். அந்தக் காட்சியை இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் அசல் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்