- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படத்திற்காக தனது லுக்கை மாற்றிய அஜித்குமார்? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க...

விடாமுயற்சி திரைப்படத்திற்காக தனது லுக்கை மாற்றிய அஜித்குமார்? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க…

- Advertisement -

அஜித் நடிக்க உள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக அஜித்குமார் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் வெளிநாட்டுக்குச் சென்று லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அஜித்திற்கு த்ரிஷா  ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

அஜித் தனது கெரியரின் தொடக்க காலகட்டத்தில் ஒரு ரொமான்டிக் ஹீரோவாகவே வலம் வந்தார். எனினும் அதன் பின் “அமர்க்களம்” திரைப்படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக உருவானார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படங்களிலேயே அஜித் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் “விடாமுயற்சி” திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் ஆக்சன் திரைப்படமாக அமையவுள்ளதாம். ஆதலால் ரசிகர்கள் மீண்டும் அஜித்குமாரை ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படம் சத்யஜோதி தியாகரானிடம் கைமாற உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதுமட்டுமல்லாது “விடாமுயற்சி” டிராப் ஆக கூட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

ஆனால் தற்போது அஜித்தும் மகிழ் திருமேனியும் வெளிநாட்டிற்கு சென்று  லுக் டெஸ்ட் எடுத்துள்ளதாக வெளிவந்த செய்தி, இத்திரைப்படம் நிச்சயமாக பிக்கப் ஆகும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இப்போது வரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் அஜித்குமாரின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ரசிகர் ஒருவருடன் அஜித்குமார் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அஜித், தாடி இல்லாமல் தென்படுகிறார். இதுதான் “விடாமுயற்சி” திரைப்படத்தின் அஜித்தின் லுக் என்று ஒரு தகவல் இந்த புகைப்படத்துடன் இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்