- Advertisement -
Homeபொழுதுபோக்குபேசிய சம்பளத்தில் ரூ. 2 கோடியை குறைத்துக் கொண்ட நடிகர் அஜீத்குமார் - அந்த ஒண்ணுக்காக,...

பேசிய சம்பளத்தில் ரூ. 2 கோடியை குறைத்துக் கொண்ட நடிகர் அஜீத்குமார் – அந்த ஒண்ணுக்காக, இப்படி ரூ. 2 கோடியை இழந்துட்டாரே? – புலம்பும் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்துடன் முடித்துவிட்டு மார்ச் முதல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்த ஒருவாரமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். அஜீத்குமார் தனக்கு சொந்தமான துபாய் வீட்டுக்குச் சென்று அங்கு குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

- Advertisement -

இன்று தனது மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடும் அஜீத்குமார், துபாயில் உள்ள பல்வேறு இடங்களில் ஜாலியாக பிக்னிக் சென்று வருகிறார். மனைவி ஷாலினியுடன், கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்தபடி அவர் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சிக்கு பிறகு தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க அவர் பெறுகிற சம்பளம் ரூ. 163 கோடி. தற்போது 25 கோடி ரூபாய் சம்பள அட்வான்ஸ் அஜீத்குமாருக்கு தரப்பட்டுள்ளது. இனி அஜீத்குமாரின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க சம்பளம், இதுவாகவே இருக்கும்.

- Advertisement -

ரஜினி, கமல், விஜய், தனுஷ், சியான் விக்ரம், விஜய், சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டனர். அதனால், அஜீத்குமாரும் தனது சம்பளத்தை ரூ. 120 கோடியில் இருந்து, ரூ. 163 கோடியாக உயர்த்தி விட்டார். அஜீத்குமார் சம்பளம் ரூ. 163 கோடி என்பது ரூ. 165 ஆக இருக்கலாம், அல்லது ரூ. 160 கோடியாக இருக்கலாம். ஏன் இந்த 163 கணக்கு என்று இப்போது தெரிய வந்துள்ளது.

அதாவது அஜீத்குமாருக்கு ராசியான எண் 1. அதனால் சம்பளத்தை கூட்டினால் எண் 1 வர வேண்டும். அதன்படி தனது சம்பளத்தை 1,6,3 என கூட்டினால் 10 வரும்படி செய்து, அதில் 1 வருவதால் இந்த சம்பளத்தை நிர்ணயித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்த முதலில் ரூ. 165 கோடி சம்பளம் என பேசிய நிலையில், 1ம் நம்பர் வருவதற்காக, ரூ. 2 கோடியை இழந்திருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.

- Advertisement -

சற்று முன்