- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பாராததை எதிர்பாருங்கள், அதுக்காக இப்படியா? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பெண்...

எதிர்பாராததை எதிர்பாருங்கள், அதுக்காக இப்படியா? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் – என்ன கொடும சேது சார் இது?

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று, நேற்று போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றனர். அதில் குறிப்பாக பேட்மேன் என அழைக்கப்படும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர்கள் தீபக், அர்னவ், அருண் பிரசாத், விஷால் மற்றும் சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் சென்றனர்.

- Advertisement -

மேலும் ஜாக்குலின், ஆனந்தி, குக் வித் கோமாளி புகழ் சுனிதா, சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, சௌந்தர்யா நஞ்சுண்டன், நடிகை தர்ஷிகா, அன்ஷிதா, தமிழ் பேச்சாளர் முத்துக்குமரன் மற்றும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த சாச்சனா உள்ளிட்ட 18 பேர் இந்த வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி கூறுகையில், இந்த வீட்டுக்குள் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். வழக்கமாக பிக்பாஸ் சீசன் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் இருந்துதான் எலிமினேஷன் துவங்கும்.இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தது பெரிய அதிர்ச்சியை போட்டியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த எலிமினேஷன் பிராசஸில், போட்டியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நாமினேஷன் செய்த ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். அது மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனாதான் என்பது தெரிய வந்துள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களில் சாச்சனா தான் வயதில் குறைந்த சின்ன பெண்ணாக இருந்தார். சின்ன பெண்ணுக்கு விளையாட வாய்ப்பே தராமல் 24 மணி நேரத்திற்குள் வீட்டிலிருந்து வெளியேற்றியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கையில் கொடுக்கப்பட்ட பிக்பாஸ் ஷீல்டு பொம்மையை வீட்டுக்குள் ஒரு கல் மீது ஓங்கி அடித்து உடைத்து விட்டு, அழுதபடி சாச்சனா வெளியேறும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் இப்படி செய்யலாமா என்று பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்